
பூட்டானில் வகை வகையான சாலட்கள் செய்து உண்பது வழக்கத்தில் இல்லை. இருந்தபோதும் பூட்டான் மக்கள் ரெட் ரைஸை சமைத்து அதனுடன் கோஜி பெரி மற்றும் சிவப்பு குடை மிளகாய் சேர்த்து வெள்ளரிக்காய் ஊறுகாயை தொட்டுக்கொண்டு சாப்பிடுவதை மிகவும் விரும்புவர்.
ரெட் ரைஸ் சாலட் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பூட்டானீஸ் ரெட் ரைஸ் 250 கிராம்(அல்லது சிவப்பு கவுனி அரிசி)
2.பொடிசா நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் 4
3.சிவப்பு குடை மிளகாய் 1 (நறுக்கியது)
4.உலர்ந்த கோஜி பெரி அல்லது உலர்ந்த மாம்பழத்துண்டுகள் 1½ கப்
5.டோஸ்ட்டட் ஹேசல் நட் 1½ கப்
ட்ரெஸ்ஸிங்க்கு தேவையானா பொருட்கள்:
1.ஆலிவ் ஆயில் ¼ கப்
2.மிரின் (Mirin) 1 டேபிள் ஸ்பூன்
3.ரைஸ் வினிகர் ⅓ கப்
4.நறுக்கிய பூண்டுப் பல் 1
5.லெமன் ஜூஸ் 2 டேபிள் ஸ்பூன்
6.துருவிய ஃபிரஷ் இஞ்சி 1 டீஸ்பூன்
7.சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ரைஸ் குக்கரில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அதில் அரிசி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சமைத்துக் கொள்ளவும்.
ஒரு பௌலில் ட்ரெஸ்ஸிங் செய்வதற்கு கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்கு கலந்துவிடவும். கலந்ததை, 20 நிமிடம் அப்படியே வைக்கவும். அந்த நேரம் மூலப் பொருட்களின் சுவையனைத்தும் நன்கு வெளிப்பட்டு ஒன்று சேர்ந்துவிடும். சமைத்த சாதம் ஆறினதும், அதை ஒரு பெரிய பௌலில் போட்டு அதனுடன் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், குடை மிளகாய் துண்டுகள், கோஜி பெரி மற்றும் டோஸ்ட்டட் ஹேசல் நட் ஆகியவற்றைப் போட்டு நன்கு கலக்கவும். பிறகு அதன் மீது உங்கள் டேஸ்ட்டிற்குத் தேவையான அளவு ட்ரெஸ்ஸிங் செய்யவும். பின் 30 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்விக்கவும்.
வெள்ளரிக்காய் ஊறுகாய் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.ஸீ சால்ட் சேர்த்து நசுக்கிய பூண்டுப் பல் 2
2.மால்ட் வினிகர் ¼ கப்
3.சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன்
4.ஸீ சால்ட் ஃபிளேக்ஸ் 1 டீஸ்பூன்
5.மிளகுத் தூள் 1 டீஸ்பூன்
6.வெள்ளரிக்காய் 1
செய்முறை:
வெள்ளரிக்காயை தோல் சீவி, மெல்லிய நீள வடிவ துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு கண்ணாடி ஜாரில் பூண்டு, வினிகர், சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் அனைத்தையும் போட்டு நன்கு குலுக்கவும். மற்றொரு பௌலில் வெள்ளரி துண்டுகளைப் போட்டு அதன் மீது, ஜாரில் உள்ள குலுக்கி வைத்த திரவத்தை ஊற்றி ஊறவைக்கவும். பின் ஃபிரிட்ஜ்ஜிலிருந்து ரெட் ரைஸ் சாலட்டை எடுத்து வெள்ளரிக்காய் ஊறுகாயுடன் பரிமாறவும். சுவையான பூட்டானீஸ் ரெட் ரைஸ் சாலட் ரெடி!