பொதுவாகவே உருளைக்கிழங்கு என்றால் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்புவோம். எண்ணெயில் பொரித்த டிஷ் அதிகம் தராமல் இப்படி வெரைட்டி லஞ்சாக செய்து தந்தால் உடல் நலனுக்கும் நல்லது. பேபி ஆலு எனப்படும் இந்த குட்டி குட்டி உருளைக்கிழங்குகள் கிடைக்கும் போது மணக்கும் பிரியாணி செய்து தந்தால் குழந்தைகளுக்கு முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து விரும்புவார்கள்.
தேவையானவை:
பேபி உருளைக்கிழங்கு- 8
கேரட், பீட்ரூட் ,பீன்ஸ் - ஒரு கப் ( நறுக்கியது)
பிரியாணி அரிசி அல்லது பாஸ்மதி அரிசி - ஒரு ஆழாக்கு
பெரிய வெங்காயம்- ஒன்று
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு தக்காளி இரண்டு வெங்காயம் ஒன்று இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் நெய் எண்ணெய் & நெய்- இரண்டு டே ஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் -2
பட்டை லவங்கம் ஏலக்காய் தலா 2
சோம்பு- சிறிது
மராட்டி மொக்கு, அண்ணாசிப்பபூ, பிரிஞ்சி இலை தலா- 1
கல்பாசி- 1 பிஞ்ச்
செய்முறை:
குக்கரில் எண்ணெய் &நெய் சோம்பு, பட்டை, லவங்கம் இத்யாதிகளைப் போட்டு வாசம் வரும் வரை பொறித்து அரைத்த புதினா, பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய கேரட் பீட்ரூட்துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு புரட்டி வேகவைத்து தோலுரித்த பேபி உருளைக்கிழங்குகளை சேர்த்து அதனுடன் ஏற்கனவே வடித்த பிரியாணி அரிசி சாதம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து லேசாக கிளறி ஐந்து நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி மேலே சிறிது நெய் விட்டு கொத்தமல்லித்தழை, பொதினா தூவி பரிமாறவும். இதற்கு வெங்காய பச்சடி, தக்காளி சாஸ் காம்பினேஷன் சூப்பர் ஆக இருக்கும்.