
தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு- 150 கிராம், நெய் – ¾ கப், ரவை - 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - ½ கப், சர்க்கரை - 1 கப், குங்குமப்பூ - சிறிது, முந்திரி -10, திராட்சை - 10 கிராம்.
செய்முறை:
பாதாம் பருப்பைச் சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்துத் தோல் நீக்கி விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடிகனமான கடாயில் நெய் விட்டு ரவையை நன்கு வறுத்துக்கொண்டு பிறகு பாதாம் விழுதைச் சேர்த்துக் குறைந்த தீயில் 15 நிமிடம் கிளறவும். விழுது சிறிது ப்ரௌன் கலர் வந்ததும் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கிளறவும். பிறகு இதில் குங்குமப்பூ பாலில் ஊறவைத்து எடுத்துச் சேர்த்து இறக்கி வைத்து முந்திரி, திராட்சையை நெய்யில் தனித்தனியாக வறுத்துச் சேர்த்து விடவும்.