
பாதாம் பிசினை பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. இன்னும் பல ஊர்களில் கடற்பாசி என்று கூட அழைப்பார்கள். இதன் நன்மை தெரிந்து விட்டால் நீங்கள் நிச்சயம் விடவே மாட்டீர்கள். அவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த ஒரு உணவு பொருள் தான் பாதாம் பிசின். பார்ப்பதற்கு பெரிய வடிவ கற்கண்டு போன்று வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும்.
பாதாம் பிசினை பல வழிகளில் தயாரித்து சாப்பிடலாம். அதிகமானோர் அதை ஊறவைத்து கஸ்டர்ட், பால், ரோஸ்மில்க், லெமன் ஜூஸ், ஸ்மூதி என பல பானங்களுடன் கலந்து குடிப்பார்கள். அதுவும் மலுமலுவென சுவையை கொண்டிருப்பதால் இது போன்ற குளிர்பானங்களுடன் சேர்ந்து குடிப்பது ருசியை கூட்டும்.
ஆனால் இதில் லட்டு செய்து சாப்பிட்டலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி வரவுள்ள நிலையில், எளிமையாக இந்த லட்டுவை செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
பாதாம் பிசின் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
கோதுமை மாவு - ஒரு கப்
நட்ஸ்
கசகசா - 2 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் - 2
பேரீச்சம்பழம் - 5
செய்முறை:
முதலில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி பாதாம் பிசினை பொன்னிறமாக வறுத்தெடுத்து கொள்ளவும். பிறகு அதே வாணலியிலேயே துருவிய தேங்காய் மற்றும் கசகசாவை போட்டு வறுத்தெடுத்து வைத்து கொள்ளவும். மேலும் முந்திரி, திராட்சை உள்ளிட்ட நட்ஸ் வகைகளையும், கோதுமை மாவையும் நெய்யிலேயே வறுத்தெடுத்து கொள்ளவும். பிறகு இந்த வறுத்தெடுத்த அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பிறகு அந்த பொடியை லட்டு வடிவில் பிடித்து கொள்ளவும். அவ்வளவு தான் ஹெல்தியான பாதாம் பிசின் லட்டு தயார்.
பாதாம் பிசினில் உள்ள ஏன்சிடெல்லிக் அமிலம் மற்றும் வைட்டமின் E, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பாதாம் பிசின் மருந்து நரம்புகளை உறுதிப்படுத்த உதவும். இது மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் நினைவுத்திறனை மேம்படுத்த உதவும்.
பாதாம் பிசின் இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை கொண்டது. இது உடலின் வெப்பத்தை குறைத்து, வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது.
பாதாம் பிசின் செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது. இது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள், பாதாம் பிசினை பாலுடன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை கூடும்.
பாதாம் பிசின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது தொற்று நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது.
நரம்பு மண்டலம்: பாதாம் பிசின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்: பாதாம் பிசின் சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளைத் தடுக்கிறது.
உடல் வலிமை: பாதாம் பிசின் உடலில் வலிமையை அதிகரிக்கிறது.