தேவை: கெட்டியான சிறிய தேங்காய், பொட்டுக்கடலை – ¼ கப், வறுத்த எள், வறுத்த வேர்க்கடலை சற்று ரவைபோல பொடித்தது - 2 டேபிள் ஸ்பூன், பாகு வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் - சிறிது, நெய - சிறிது.
செய்முறை: தேங்காய்க் குடுமியை நீக்கி நன்கு சுத்தம் செய்து, ஒரு தேங்காய்க் கண்ணை துவாரம் செய்து நீரை எடுத்துவிடவும். அந்த நீரில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி துளையின் வழியாக, கரைத்த பாகு, ஏலத்தூள், பொட்டுக்கடலை, எள் கலவை, நெய் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுவிட்டு, மைதா (அ) கோதுமை மாவை சிறிது நீர் சேர்த்துப் பிசைந்து மூடி ஒட்டிவிடவும். கரி அடுப்பில் (அ) விறகு அடுப்பில் மேல்ஓடு வெடிக்கும்வரை சுட்டு எடுக்கவும். ஆறியவுடன் ஓட்டினை துண்டுகளாக்கி உள்ளே இருப்பதைச் சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும். (கிராமங்களில் விறகு அடுப்பில் சுடுவார்கள்.)