பேக்கரி டேஸ்ட்டில் வாழைப்பழ கேக் செய்யலாம் வாங்க!

வாழைப்பழ கேக்...
வாழைப்பழ கேக்...www.youtube.com

சில கேக்குகள் பேக்கரியில் வாங்கி சாப்பிடும் போது மிகவும் சுவையாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும். அதில் வாழைப்பழ கேக்கும் ஒன்று. ஆனால் அதையே நாம் வீட்டிலே செய்து பார்த்தால் அதே பதத்தில் வருவதில்லை. அப்படி என்ன தான் பேக்கரியிலே மாயம் செய்கிறார்கள் என்று தோன்றும். இன்று பேக்கரியில் செய்வது போலவே சாப்டாக மற்றும் ஈரப்பதத்துடன் எப்படி வாழைப்பழ கேக் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

வாழைப்பழ கேக் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பெரிய வாழைப்பழம்-2.

முட்டை-1.

வெண்ணை-1/4 கப்.

ஜீனி-1/2 கப்.

மைதா மாவு-1கப்.

பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி.

பேக்கிங் சோடா-1/2 தேக்கரண்டி.

உப்பு-1/4 தேக்கரண்டி.

வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்-1 தேக்கரண்டி.

வாழைப்பழ கேக் செய்முறை விளக்கம்:

முதலில் குக்கரில் ஒரு லேயர் உப்பை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் ஸ்டேன்ட் வைத்து மூடி வைத்து மிதமான சூட்டில் 15 நிமிடம் சூடாகட்டும்.

இப்போது 2 பெரிய வாழைப்பழம்  எடுத்துக்கொண்டு அதை உரித்து ஒரு பவுலில் வைத்து  நன்றாக மசித்து கொள்ளவும். அதில் 1/4கப் வெண்ணை, 1 முட்டை, 1/2 கப் ஜீனி சேர்த்துக்கொள்ளவும். இப்போது அதை நன்றாக கலந்து விடவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்,1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா, உப்பு ¼ தேக்கரண்டி, வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் 1 தேக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். கடைசியாக இதில் 1கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால்.. ஆச்சரியமா இருக்கே!
வாழைப்பழ கேக்...

இப்போது அந்த கலவையை நன்றாக கலக்கவும். பிறகு கேக் செய்யக்கூடிய பாத்திரத்தில் வெண்ணையை தடவி விட்டு செய்து வைத்திருக்கும் கலவையை அதில் ஊற்றவும். இப்போது அந்த பாத்திரத்தை ஏற்கனவே  சூடு பண்ணி வைத்திருக்கும் குக்கரில் வைத்து 40 நிமிடம் வேக வைக்கவும். பிறகு வெளியே எடுத்து ஆற விடவும். இப்போது வாழைப்பழ கேக்கை துண்டுகளாக வெட்டவும். சுவையான, சாப்டான பேக்கரியில் செய்வது போன்றே வாழைப்பழ கேக் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com