ஆரோக்கியத்தை அள்ளித் தரும் வாழைப்பூ குழம்பு!

Banana flower Curry
Banana flower Curry
Published on

வாழைப் பூ என்றாலே சிலருக்கு சாப்பிட பிடிக்காது. ஏனென்றால் அது துவர்ப்பு சுவையுடையதாக இருக்கும். வாழைப்பூ வைத்து வடை செய்தால் கூட அதில் கொஞ்சம் துவர்ப்பு சுவை இருக்கும். அதேபோல பொரியல் செய்தாலும் அனைவரும் விரும்பும் சுவை அதில் இருக்காது. ஆனால் வாழைப்பூவில் குழம்பு வைத்து கொடுத்தால் இதுவரை வாழைப்பூ சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். வாரம் ஒரு முறையாவது வாழைப்பு சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். 

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பூ - 5 மடல்கள்

  • புளி - 1 நெல்லிக்காய் அளவு

  • துவரம் பருப்பு - 150 கிராம்

  • சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

  • எண்ணெய் - சிறிய அளவு

  • உப்பு - தேவையான அளவு

  • வெங்காயம் - 1

  • காய்ந்த மிளகாய் - 2

  • கடுகு - சிறிதளவு

செய்முறை: முதலில் துவரம் பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். வாழைப்பூவையும் நடுவில் உள்ள நரம்பை எடுத்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வாழைப்பூவை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

அடுத்ததாக புளி கரைசலை ஒரு வானலியில் ஊற்றி உப்பு சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விட்ட பின்னர் வதக்கி வைத்துள்ள வாழைப்பூ மற்றும் துவரம் பருப்பு சேர்த்து மேலும் நன்றாக கொதிக்க விடவும்.

இறுதியில் வெங்காயம், கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து இறக்கினால் ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ குழம்பு ரெடி. இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்பது நல்லது. வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் வாழைப்பூ குழம்பு சாப்பிட்டு வந்தால் எல்லாம் மாயமாகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com