வாழைப்பூ துவையல், வாழைப் பூ பச்சடி இப்படி செஞ்சு பாருங்க..!

வாழைப் பூ துவையல்
வாழைப் பூ துவையல்Image credit - cookpad.com

வாழைப் பூ துவையல்

தேவை:

வாழைப்பூ ஆய்ந்து நறுக்கியது - 1 கப்

புளி - சிறிது

உளுத்தம் பருப்பு-4 டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் - 2

இஞ்சி - சிறு துண்டு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

வாழைப்பூவை வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வாழைப்பூவை போட்டு நன்கு வதக்கவும். பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாய், இஞ்சி புளி சேர்த்து  வறுக்கவும். ஆறியதும் வதக்கிய அனைத்து பொருட்களையும் உப்பு சேர்த்து மிக்ஸில் நைசாக அரைக்கவும்.

இதை சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். வயிற்றுப் பிரச்னை தீரும்.

வாழைப் பூ பச்சடி

தேவை:

நறுக்கிய வாழைப்பூ - 1 கப்

துவரம் பருப்பு-1/4 கப்

தக்காளி - 2

சாம்பார் வெங்காயம் - நறுக்கியது - 3 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

வர மிளகாய் - 2

கடலைப் பருப்பு-1/4 டீஸ் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு-தலா கால் டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிட்டிகை

உப்பு, மல்லித்தழை - தேவைக்கு

வாழைப் பூ பச்சடி
வாழைப் பூ பச்சடி

செய்முறை:

துவரம் பருப்பை, ம.தூள் சேர்த்து நன்கு வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

பின் மோரில் நறுக்கி போட்ட வாழைப்பூவை பிழிந்து எடுத்து போட்டு வதக்கவும். அதில் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

இதையும் படியுங்கள்:
மாலை நேர சோர்வே... போ போ போ!
வாழைப் பூ துவையல்

பின் வெந்த துவரம்பருப்பை போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.  மேலே மல்லித் தழை போட்டு இறக்கவும்.

சாதத்தில் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். தளர்வாக வேண்டும் எனில் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். ரத்த சோகை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களிலிருந்து காக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com