நமது வீடுகளில் வாழைத்தண்டைப் பயன்படுத்தி பொரியல் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் வாழைத்தண்டை பயன்படுத்தி வித்தியாசமாக துவையலை நாம் இன்று செய்யப் போகிறோம். இது ருசியாக இருக்கும். அதேசமயம் செய்வதும் எளிது.
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை நாம் நம்முடைய உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது கிடையாது. அதேசமயம் வாழைத்தண்டை சுத்தம் செய்வது சிரமம் என எண்ணி பலர் அதை வாங்க மாட்டார்கள். ஆனால் கிட்னியில் உள்ள கல்லை நீக்கும் சக்தி வாழைத்தண்டுக்கு உண்டு. அதே நேரம் கிட்னியில் கல் வராமலும் பார்த்துக் கொள்ளும். இதை வாரத்தில் ஓரிரு நாட்கள் எடுத்துக்கொண்டால் கிட்னி சார்ந்த பிரச்சினைகள் நீங்கும்.
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - 1 துண்டு.
காய்ந்த மிளகாய் - 4.
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.
புளி - சிறிதளவு.
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை
முதலில் வாழ்த்தண்டை எடுத்து நன்றாக நறுக்கி அதில் உள்ள நர்களை நீக்கிவிடவும். பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு நன்றாக வறுத்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வாழைத்தண்டை போட்டு நன்றாக வதக்கவும். வாழைத்தண்டு வழங்கியதும் கீழே இறக்கி வைத்து ஆற வைக்கவும்.
அதன் பிறகு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த உளுத்தம் பருப்பு கலவை மற்றும் வாழைத்தண்டுகளைப் போட்டு, புளி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு அரைத்து எடுத்தால், சுவையான ஆரோக்கியமிக்க வாழைத்தண்டு துவையல் தயார்.
இந்த துவயலை இட்லி தோசைக்கு சாப்பிடலாம் அல்லது அப்படியே சாப்பிட்டாலும் சுவை நன்றாக இருக்கும்.