இந்திய மசாலா பொருட்களின் பலன்கள்!

மசாலா பொருட்கள்
மசாலா பொருட்கள்ta.quora.com

ந்தியாவின் சுவைமிக்க உணவுகளுக்கு பின் இருக்கும் ரகசியம் மசாலா பொருட்கள்தான். மசாலா பொருட்களை நாம் கண்களை மூடிக்கொண்டு பயன்படுத்துவதற்கு காரணம் வெறும் சுவை தருகிறது என்று மட்டுமல்ல நிறைய பலன்களையும் சேர்த்து தருகிறது என்றுதான். அந்த வகையில் மசாலா பொருட்களின் நண்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

மிளகு:

மிளகு உடலில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாக காரணமாகிறது. இதனால் இருமல், மலச்சிக்கல், தொண்டை வலி, சளி ஆகியவற்றிற்கு மருந்தாக செயல்படுகிறது.

கருப்பு ஏலக்காய்:

ந்த கருப்பு ஏலக்காயை பிரியாணிக்கு பயன் படுத்துவார்கள். இது தொண்டைப் பிரச்சனை, ஈறு பிரச்சனை, நெஞ்செரிச்சல் ஆகியவை குணமாக உதவுகிறது.

கிராம்பு:

இது உணவின் சேர்த்தால் சற்று கூடுதலாக வாசனையைத் தரும். பற்களில் பிரச்சனை உள்ளவர்கள் கிராம்பு சாப்பிடலாம். மேலும் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடும்போதும் மது அருந்தும் போதும் கிராம்பு எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் வாந்தி, வயிற்றுப் போக்கு, செரிமானப் பிரச்சனை ஆகியவற்றிற்கும் மருந்தாக உள்ளது.

சீரகம்:

ணவில் சீரகம் சேர்த்து சாப்பிடும்போது உடல் குளிர்ச்சியாகும். மேலும் இருமல், ரத்த அழுத்தம் பைல்ஸ் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

பட்டை:

ட்டை நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் இது உடம்பில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் இன்சுலினைக் கட்டுப்படுத்தி , தேவையான அளவில் சுரக்க உதவும். மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
தனக்குத்தானே மோட்டிவேட் செய்து கொள்வது எப்படி?
மசாலா பொருட்கள்

ஜாதிக்காய்:

ஜாதிக்காய் நிறையா நாட்டு மருந்துகளில் பயன் படுத்தப்படுகிறது. ஏனெனில் இது பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவைக்கு மருந்தாக இருக்கிரது. மேலும் பல மணி நேரம் பசி வராமல் இருப்பதற்கு உதவுகிறது. அதோடு ஞாயபக சக்தியையும் அதிகமாக்குகிறது.

குங்குமப்பூ:

குங்குமப்பூ விலை உயர்ந்த பொருள் என்றாலும் பல நன்மைகளைத் தருகிறது. இது முக சருமம் பொலிவாக மாற உதவுவதோடு மன அழுத்தம், பார்வை கோளாறு, ஞாபக மறதி ஆகியவற்றை சரி செய்யவும் உதவுகிறது.

பெருங்காயம்:

பெருங்காயம் பெண்களுக்கானப் பல பிரச்சனைகளை சரி செய்கிறது. அதாவது அதிகமான வயிற்று வலி, குறை பிரசவம், மலட்டுத்தன்மை, தேவையற்ற கருகலைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.

கடுகு:

டுகு பொதுவாக நிறைய உணவுகளில் பயன் படுத்துவார்கள். இது தலைவலி குணப்படுத்டுகிறது. மேலும் முகப்பொலிவிற்கும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

கொத்தமல்லி
கொத்தமல்லி

கொத்தமல்லி:

கொத்தமல்லி நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், எடை குறையவும், தலைமுடி வளரவும் சரும பராமரிப்பிற்கும் உதவுகிறது. அதேபோல் கொத்தமல்லியில் வைட்டமின் சி உள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

கற்பூரவள்ளி:

து ரத்த உரைதல், இதய நோய்கள் ஆகியவை வராமல் தடுக்கும். அதேபோல் எலும்பு மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு காய்ச்சல், சளி, ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கும் மருந்தாக செயல்படுகிரது.

இஞ்சி:

ஞ்சி உணவில் சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை, குமட்டல் பிரச்சனை, மூட்டு வலி, மாதவிடாய் வலி போன்ற பல பிரச்சனைகளை சரி செய்கிறது.

மஞ்சள்:

ஞ்சள் உடம்பி ஏற்படும் பலவகையான பிரச்சனை களுக்கு தீர்வாக உள்ளது. இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சுவாசக் கோளாறுகள், புண்கள், குடல் கோளாறுகள், கல்லீரல் நோய், அம்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com