இனி சாம்பார், ரசம் எதுக்கு? 5 நிமிடத்தில் கேரளா ஸ்டைல் மோர் குழம்பு செய்து அசத்துங்க!

Mor Kuzhambu
Mor Kuzhambu
Published on

சாம்பார், புளிக் குழம்பு, காய்கறி குழம்பு, இரசம், வத்தக் குழம்பு என இப்படி தான் நம் பெரும்பாலான வீடுகளில் குழம்பு வைத்து சாப்பிடுகிறோம். வெயில் காலங்கள் மட்டுமல்லாமல் குளிர் காலங்களிலும் உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடியதாகவும், நல்ல சுவையாகவும், கேரளா ஸ்டைல்ல ஒரு மோர் குழம்பு (Mor Kuzhambu) வச்சு சாப்பிட்டு பாருங்க சும்மா அமிர்தமா இருக்கும். இப்போ காரசாரமான நல்ல சுவையான மோர் குழம்பு (Mor Kuzhambu) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

தயிர் - 1 கப் (250ml)

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

கடுகு உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

இஞ்சி - சிறிது

பூண்டு - சிறிது

சின்ன வெங்காயம் - 6 to 8

பச்சை மிளகாய் - 3

காய்ந்த மிளகாய் - 3

கருவேப்பிலை - தாளிக்க

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1/4 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு தனி பாத்திரத்தில் 1 கப் தயிரை ஊற்றி அதில் அரை கப் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

மற்றொருபுறம், அடுப்பில் வட சட்டியை வைத்து சட்டி சூடானதும், எண்ணையை ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பை போடவும், கடுகு பொரிந்த உடன் வெந்தயத்தை சேர்க்கவும். அதில் பொடி பொடியாக வெட்டிய சிறிது இஞ்சி, பூண்டை சேர்க்கவும். இப்போது நன்கு வதக்கவும். கீரிய மூன்று பச்சை மிளகாயை சேர்க்கவும். பிறகு குட்டி குட்டியாக வெட்டிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நல்லா பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும் காய்ந்த பச்சை மிளகாயை சேர்க்கவும், அதனுடன் கொஞ்சம் கருவேப்பிலையையும் சேர்க்கவும். இப்போது நன்கு வதக்கிக் கொள்ளவும்.

முதலிலேயே காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்திருந்தால் இந்நேரம் கொஞ்சம் அது கருகி இருக்கும். எனவேதான் இந்த இரண்டை மட்டும் இறுதியில் சேர்க்கவும். பிறகு அதில் கொஞ்சமாக பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும். வதங்கியதும் அடுப்பை நன்கு குறைக்க வேண்டும்.

இப்போது கரைத்து வைத்திருந்த தயிரை மெதுவாக வட சட்டியில் ஊற்றவும். அடுப்பை அதிகமாக வைக்காமல் மெதுவான தீயில், இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். தயிரானது எக்காரணம் கொண்டும் கொதித்து விடக்கூடாது. பிறகு மோர் குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியில் அடுப்பை அணைத்து, வேண்டுமென்றால் குழம்பில் கொத்தமல்லியை சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சூப்பரான சுவையான கலக்கலான கேரளா ஸ்டைல் மோர் குழம்பு ரெடி.

இந்த மோர் குழம்பை, குழைவான சோற்றில் ஊற்றி நன்கு பிசைந்து, தொட்டுக்க உருளைக்கிழங்கு அல்லது பொரியல்கள் போன்றவற்றுடன் சாப்பிடும்போது ஒரு கலக்கல் காம்பினேஷனாக இந்த மோர் குழம்பு இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இன்னும் என்ன யோசிக்கிறீங்க, அடுத்த லஞ்சுக்கு இந்த மோர் குழம்ப ட்ரை பண்ணி பாருங்க... சும்மா டேஸ்ட் தெறிக்க விடும்..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com