மணக்க மணக்க பச்சை மாங்காய் சாம்பார் - வறுத்தரைத்த சாம்பார் செய்யலாமா?

மாங்காய் சாம்பார்
மாங்காய் சாம்பார்Image credit - youtube.com

சாம்பார்னாலே நமக்கு சட்டுனு ஞாபகத்துக்கு வர்றது முருங்கைக்காய் சாம்பார், மாங்காய் சாம்பார், மாங்காய் கத்திரிக்காய் முருங்கைக்காய் மூன்றும் சேர்த்து போட்டு சாம்பார் தான். இந்த சாம்பாரெல்லாம் சாப்பிட ருசியாக இருப்பதுடன் செய்யும்போதே வீடு மணக்கும்.

சில மாங்காய் தோலுடன் எளிதில் வெந்துவிடும். இன்னும் சில மாங்காயோ தோல் தடித்து வேக நேரம் எடுக்கும். புளிப்பும் அதே போல் தான். மாங்காய்க்கு மாங்காய் புளிப்பு மாறுபடும். ருமானி மாங்காய், ஆந்திர மாங்காய் எல்லாம் புளிப்பு அதிகம் இருக்கும். இவற்றைக் கொண்டு ஆவக்காய் செய்யலாம். அதுவே கிளிமூக்கு மாங்காய், ஒட்டு மாங்காயில் அவ்வளவு புளிப்பு இராது. எனவே மாங்காய் புளிப்புக்கு தகுந்த உப்பு காரம் புளி சேர்த்து சாம்பார் செய்ய ருசியும் மணமும் கூடும். 

மாங்காய் 1 

துவரம் பருப்பு 1/2 கப்

புளி சிறு நெல்லிக்காய் அளவு

உப்பு.    தேவையானது

சாம்பார் பொடி 2 ஸ்பூன்

மஞ்சள் பொடி  1/2 ஸ்பூன்

வெங்காயம் 1 

தக்காளி 1 

தாளிக்க: கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, நல்லெண்ணெய்

துவரம் பருப்பை குழைவாக வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து இரண்டு கிளறு கிளறி பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.புளியை நீர்க்க கரைத்து விட்டு உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில், ஒன்று சேராத ஆறுகளின் சங்கமம் எங்கு ஏற்படுகிறது தெரியுமா?
மாங்காய் சாம்பார்

கொதிக்க ஆரம்பிக்கும் சமயம் பெரிய துண்டுகளாக நறுக்கிய மாங்காய்களை சேர்த்து விடவும். மாங்காய் நன்கு வெந்ததும் குழைவாக வெந்த துவரம் பருப்பை சேர்த்து ஒரு சிறு துண்டு வெல்லம் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். மணக்க மணக்க பச்சை மாங்காய் சாம்பார் தயார்.

குறிப்பு: மாங்காய் துண்டுகள் சாம்பாரில் கரையாமல் பார்த்துக் கொள்ளவும்.

வறுத்தரைத்த சாம்பார்:

வறுத்தரைத்த சாம்பார்
வறுத்தரைத்த சாம்பார்Image credit - youtube.com

தனியா 2 ஸ்பூன் 

மிளகாய் 4

மிளகு 10

கடலைப்பருப்பு 1 ஸ்பூன் 

உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்

தேங்காய் துருவல் 1/2 கப்

மேலே சொன்ன மாங்காய் சாம்பார் முறைதான். ஆனால் சாம்பார் பொடிக்கு பதிலாக வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா, மிளகாய், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுத்து கடைசியாக தேங்காய் துருவல் போட்டு வறுத்து மிக்ஸியில் பொடித்து விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். இதனை சாம்பார் கொதித்து புளி வாசனை போனதும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்க வேண்டியதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com