சூப்பர் டேஸ்டில் பிள்ளையார்பட்டி மோதகம்-ஜிலேபி செய்யலாமா?

Pillayarpatti mothagam
Pillayarpatti mothagam and jalebi recipesImage Credits: Samayam Tamil

காரைக்குடியில் உள்ள பிள்ளையார்பட்டி கோவிலில் மோதகம் விநாயகர் சதூத்தியன்று பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த மோதகத்தை வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.

பிள்ளையார்பட்டி மோதகம் செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி-1கப்.

பாசிப்பருப்பு-1/3 கப்.

வெல்லம்- 1 ½ கப்.

துருவிய தேங்காய்-1 கப்.

உப்பு-1 சிட்டிகை.

நெய்-3 தேக்கரண்டி.

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

பிள்ளையார்பட்டி மோதகம் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி 1கப், பாசிப்பருப்பு 1/3 கப் சேர்த்து நன்றாக கழுவியதும் இதை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டிய பிறகு ஒரு காட்டன் துணியில் நன்றாக பரப்பி வைத்து நிழலிலேயே காய வைக்கவும். இப்போது அதை எடுத்து கடாயில் நெருப்பை கொஞ்சமாக வைத்து வாசம் வரும் வரை 5 நிமிடம் வறுத்து எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் மாற்றி ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 3 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். தண்ணீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்போது அதில் அரைத்துவைத்த அரிசி பருப்பை சேர்த்து கிண்டவும். இதை மூடிப்போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும். அரிசிப்பருப்பு நன்றாக வெந்ததும் 1 ½ கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். இப்போது வெல்லம் நன்றாக கரைந்ததும் 1 கப் துருவிய தேங்காய், 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள், 3 தேக்கரண்டி நெய் சேர்த்து கிண்டி விடவும். ஃபேனிலிருந்து ஒட்டாமல் மாவு பிரிந்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி ஆரவைத்துக் கொள்ளவும். இப்போது கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு உருண்டைகளாக உருட்டவும். இப்போது உருட்டி வைத்த மோதகத்தை இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான். ரொம்ப சுவையான மற்றும் மிருதுவான மோதகம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் டிரை பண்ணி பாருங்கள்.

ஜிலேபி செய்ய தேவையான பொருட்கள்:

மைதா மாவு-1 கப்.

சோளமாவு-3 தேக்கரண்டி.

தயிர்-3/4

நெய்-1 தேக்கரண்டி.

குங்குமப்பூ- சிறிதளவு.

சக்கரை-2 கப்.

எழுமிச்சை சாறு-1/2 மூடி.

பேக்கிங் பவுடர்-1/4 கப்.

எண்ணெய்- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் நுங்கு பாயா-சோயா சீஸ் பால்ஸ் செய்யலாம் வாங்க!
Pillayarpatti mothagam

ஜிலேபி செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் 1 கப் மைதா, 3 தேக்கரண்டி சோளமாவு, ¾ கப் தயிர், 1 தேக்கரண்டி நெய் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் குங்குமப்பூவை  சிறிது மாவுடைய நிறத்திற்காக சேர்த்துக்கொள்ளவும். இப்போது இந்த மாவை நன்றாக கிண்டவும். தோசைமாவு பதத்திற்கு கொண்டு வர தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். மாவை 8 முதல் 12 மணி நேரம் புளிக்க வேக்க வேண்டும். அப்போதுதான் மொறுமொறு ஜிலேபி கிடைக்கும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து 2 கப் சக்கரைக்கு 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இப்போது சக்கரை கரையும் வரை நன்றாக கொதிக்கவிடவும். சக்கரை பாகு தயார் ஆனாதும் அதில் பாதி எழுமிச்சைப்பழத்தின் சாறை சேர்க்கவும்.

இப்போது ஜிலேபி மாவில் ¼ தேக்கரண்டி பேக்கிங் பவுடர் சேர்த்துக்கொள்ளவும். இப்போது இந்த மாவை பிளேஸ்டிக் பேக்கில் ஊற்றி கீழே ஒரு சின்ன துவாரம் போட்டுக் கொள்ளவும். ஃபேனில் எண்ணெய்யை மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு மாவை மூன்று சுருளாக சுற்றி ஊற்றவும். ஜிலேபி நன்றாக பொரிந்து வந்ததும், அதை எடுத்து சர்க்கரை பாகில் போட்டு விடவும். பாகில் ஜிலேபி 30 விநாடிகள் இருந்தால் போதுமானது. அவ்வளவுதான். இனிப்பான ஜிலேபி தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com