கும்பகோணம் கடப்பா-பாலக் கீரை தொக்கு எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா?

Healthy recipes...
Healthy recipes...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும், வித்தியாசமான , ஆரோக்கியமான சுலபமான சைட் டிஷ்தான் கும்பகோணம் கடப்பா.

தேவை:

பாசிப்பருப்பு - 1/2கப்

உருளைக்கிழங்கு - 2

தேங்காய் துருவல் - 1/4 கப்

முந்திரி பருப்பு - 5

சோம்பு - 1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - சிறுதுண்டு

பூண்டு - 3 பல்

பெரிய வெங்காயம் - 1

எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கு

பட்டை -1, சோம்பு - சிறிது

லவங்கம் -1, பிரியாணி இலை - 1, பச்சை

மிளகாய் கீறியது - 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். ஆறிய பின் கழுவி குக்கரில் பாசிப்பருப்புடன் 3 மடங்கு தண்ணருடன்  தோல் சீவிய உருளைக்கிழங்கை  துண்டுகளாக போடவும். 3 விசில் வந்ததும் இறக்கவும்.

ஆறியபின் மத்தால் மசிக்கவும். ரொம்பவும் குழையக்கூடாது. மிக்ஸியில் தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், பூண்டு, முந்திரி சேர்த்து பேஸ்ட் போல் அரைக்கவும்.

அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு, லவங்கம், பிரியாணி இலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதங்கிய பின் வேகவைத்து மசித்து பருப்பு, உருளை கலவையை சேர்த்து கலக்கி, அதன் பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு, கெட்டியான பின் தண்ணீர் மீண்டும் சேர்த்து குழம்பு பதம் வந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி சாப்பிட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு ஏற்றது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பாலக் கீரை தொக்கு!

பாலக்கீரை ஒரு கட்டு

பெரிய வெங்காயம் 1 

பூண்டு 6 பற்கள் 

உப்பு தேவையானது 

காரப்பொடி 1 1/2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
பெண்களை 5 வகைகளில் அழகாக்கும் விளக்கெண்ணெய்!
Healthy recipes...

தாளிக்க: 

கடுகு, உளுத்தம் பருப்பு ,சீரகம், கருவேப்பிலை சிறிது காய்ந்த மிளகாய் 2

பாலக்கீரை ஒரு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியதாக நறுக்கி உப்பு, காரப்பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

அடி கனமான வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் கிள்ளியது இரண்டு சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பச்சை வாசனை போனதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பாலக்கீரையை சேர்த்து கீரைக்கு தேவையான உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். தட்டை போட்டு மூடி மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து கிளறவும். கீரை நன்கு வதங்கியதும் ஒரு கரண்டி அளவு புளிக்கரைசலை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்க மிகவும் ருசியான பாலக்கீரை தொக்கு தயார். 

இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அமிர்தமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com