டேஸ்டியான கோதுமை அல்வா-முட்டை சேமியா பணியாரம் செய்யலாமா?

Wheat halwa
Wheat halwa and egg semiya paniyaram recipesImage Credits: kamariclarkie.com

ங்கே தமிழ்நாட்டில் கேசரியை எப்படி அடிக்கடி செய்வோமோ, அதேபோல வடஇந்தியாவில் கோதுமை அல்வா மிகவும் பிரபலம். அத்தகைய சிறப்புமிக்க கோதுமை அல்வாவை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பாக்கலாம் வாங்க.

கோதுமை அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு-1கப்.

சக்கரை-1 கப்.

நெய்-1 கப்.

முந்திரி-10

ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.

கோதுமை அல்வா செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில் 2கப் தண்ணீர் சேர்த்து அதில் 1கப் சக்கரை சேர்த்து சக்கரை கரையும் வரை கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு ஃபேனில் 1கப் கோதுமை மாவு சேர்த்து 1 நிமிடம் வறுத்து எடுக்கவும். இப்போது ஃபேனில் 1 கப் நெய் சேர்த்து அதில் வறுத்து வைத்த கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். மாவின் நிறம் மாறியதும் செய்து வைத்திருக்கும் சக்கரை பாகை கொஞ்சம் கொஞ்சமாக இதில் சேர்த்து கிண்டி விடவும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிண்டும் போது அல்வா பதத்திற்கு வந்துவிடும். கடைசியாக சிறிது நெய் விட்டு அல்வாவை கிண்டியதும் நெய்யில் பொன்னிறமாக பொரித்து வைத்திருக்கும் முந்திரி, 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து அல்வாவை கிண்டியிறக்கவும். அவ்வளவு தான். சுவையான கோதுமை அல்வா தயார். நீங்களும் இந்த ரெசிப்பியை வீட்டில் டிரை பண்ணி பாருங்கள்.

முட்டை சேமியா பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை -2

வெங்காயம்-1

கருவேப்பிலை- சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

பச்சை மிளகாய்-1

மிளகுத்தூள்-1 தேக்கரண்டி.

ஜீரகத்தூள்- 1தேக்கரண்டி.

கொத்தமல்லி-சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

வேகவைத்த சேமியா -2 கரண்டி

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான உன்னியப்பம்-ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா?
Wheat halwa

முட்டை சேமியா பணியாரம் செய்முறை விளக்கம்:

முதலில் சேமியாவை நன்றாக சுடுத்தண்ணீரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் முட்டை 2, கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, ஜீரகம் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, மிளகு தூள் 1 தேக்கரண்டி, கடைசியாக வேக வைத்த சேமியாவை 2 கரண்டி சேர்த்து கொண்டு நன்றாக கலக்கி எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் குழி பணியாரம் செய்யும் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் தடவி விட்டு செய்து வைத்திருக்கும் கலவையை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். நன்றாக வெந்ததும் இன்னொரு பக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இப்போது சுவையான முட்டை சேமியா குழிப்பணியாரம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணி பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com