வெயிலுக்கு மிகவும் இதமான மிக்ஸ் ஃப்ரூட் கஸ்டர்ட் செய்யலாமா?

மிக்ஸ் ஃப்ரூட் கஸ்டர்ட்
மிக்ஸ் ஃப்ரூட் கஸ்டர்ட் Image credit - pixabay.com

மிக்ஸட் ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட்:

பால் அரை லிட்டர் 

கஸ்டர்ட் பவுடர் 2 ஸ்பூன் 

சர்க்கரை 2 ஸ்பூன் 

பழங்கள : ஆப்பிள், வாழைப்பழம், மாதுளம் பழம், சப்போட்டா  (அவரவர் விருப்பத்திற்கு தகுந்தவாறு பழங்களை சேர்க்கலாம்) பாதாம், முந்திரி பருப்புகள் 1 கைப்பிடி

பாலில் தண்ணீர் சேர்க்காமல் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். 2 ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை பச்சை பாலில் கட்டிகள் இல்லாமல் கரைத்து கொதிக்கும் பாலில் விட்டு கிளறவும். இரண்டு நிமிடங்களில் கொதித்து கெட்டியாகும் போது சர்க்கரை 2 ஸ்பூன் சேர்த்து கலந்து இறக்கவும். ஆறியதும் அதனை ஒரு கண்ணாடி பவுலில் விட்டு நறுக்கிய பழங்களையும்,  உலர் பழங்களையும் (பாதாம், முந்திரி) சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ந்ததும் பரிமாற மிகவும் ருசியான வெயிலுக்கு இதமான மிக்ஸட் ப்ரூட்ஸ் கஸ்டர்ட் ரெடி

இட்லிப் பொடி ரவா உருண்டை

ரவை ஒரு கப் 

அவல் ஒரு கப்

உப்பு தேவையானது

சீரகம் 1 ஸ்பூன்

இஞ்சி துருவல்  2 ஸ்பூன்

கறிவேப்பிலை சிறிது

ரவா உருண்டை
ரவா உருண்டைImage credit - pixabay.com

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய் ஒரு பாத்திரத்தில் ரவை ஒரு கப், மெல்லிய அவல் ஒரு கப் இரண்டையும் சேர்த்து தேவையான உப்பு, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிது சேர்த்து கிளறி விடவும். அடுப்பில் இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்கு சூடானதும் வெந்நீரை இந்தக் கலவையில் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடங்கள் தட்டைப் போட்டு மூடி வைக்கவும். பிறகு சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் எண்ணெய் தடவி வைத்து ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.

இதையும் படியுங்கள்:
புன்னகைத்துப் பாருங்கள் மகிழ்ச்சி மலரும்!
மிக்ஸ் ஃப்ரூட் கஸ்டர்ட்

வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, சிறிது கருவேப்பிலை சேர்த்து நல்லெண்ணெய் விட்டு தாளித்து கடுகு பொரிந்ததும் வெந்த உருண்டைகளை சேர்த்து கிளறவும். பெருங்காயத்தூள் அரை ஸ்பூன், இட்லிப் பொடி 4 ஸ்பூன் சேர்த்து கிளறி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். 

மிகவும் சுவையான காலை டிபன் அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com