
இன்றைக்கு டேஸ்டியான வாழைக்காய் கோலா உருண்டை மற்றும் பால்கோவா ரோஸ்மில்க் ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
வாழைக்காய் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1
பூண்டு - 4
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 3
கருவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
கல் உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
வாழைக்காய் கோலா உருண்டை செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு வாழைக்காயை நறுக்கி குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.
வாழைக்காய் ஆறியதும் தோலை நீக்கிவிட்டு மசித்து வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பூண்டு 4, இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, காய்ந்த மிளகாய் 3, சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
இப்போது கருவேப்பிலை சிறிதளவு, சோம்பு 1 தேக்கரண்டி, பொட்டுக்கடலை 1 கப், துருவிய தேங்காய் 1கப் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இத்துடன் கல் உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி சிறிதளவு, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி சேர்த்து கலந்துக் கொள்ளலாம்.
இப்போது இதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த வாழைக்காயுடன் இதை சேர்த்துக் கலந்துவிட்டுக் கொள்ளவும். இதை உருண்டைகளாக உருட்டி கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான வாழைக்காய் கோலா உருண்டை தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
பால்கோவா ரோஸ்மில்க் செய்ய தேவையான பொருள்:
பால் - 1 லிட்டர்
ரோஸ் சிரப் - தேவையான அளவு
கோவா - 1கப்
சர்க்கரை - 1கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
குங்குமப்பூ - சிறிதளவு
ஐஸ்கட்டி - தேவையான அளவு
பால்கோவா ரோஸ்மில்க் செய்முறை விளக்கம்:
முதலில் கடாயில் 1 லிட்டர் முழு கொழுப்புள்ள பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். பால் நன்றாக கொதித்து வந்ததும் தேவையான அளவு ரோஸ் சிரப் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஃபேனில் பால் 1 கப் ஊற்றி அதில் சர்க்கரை இல்லாத கோவா 1 கப்பை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். பாலில் கோவா நன்றாக கரையும் வரை கலந்துவிட்டு சுண்ட விடவும். இப்போது பாலில் 1 கப் சர்க்கரை, ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி, குங்குமப்பூ சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டு கெட்டியானதும் இறக்கிவிடவும்.
இப்போது கண்ணாடி கிளாசில் ஐஸ்கட்டிகளை சேர்த்து அதன் மீது செய்து வைத்திருக்கும் கோவாவை சேர்த்து அதன் பிறகு ரோஸ் மில்க்கை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு பரிமாறினால், சுவையான பால்கோவா ரோஸ்மில்க் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.