சுவையும் சத்தும் நிறைந்த மிருதுவான பனானா இட்லி செய்யலாமா?

healthy idly recipes...
healthy idly recipes...Image credit - onmanorama.com
Published on

ழக்கமாக நம் காலை உணவிற்கு நாம் தேர்ந்தெடுக்கும் டிபன் வகைகளில் இட்லியும் தோசையுமே அதிகளவு இடம் பிடிப்பவைகளாக இருக்கும். தோசையில் வெவ்வேறு பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ரவா தோசை, ராகி தோசை நெய் தோசை என பல வகை உண்டு. இட்லியிலும் காஞ்சிபுரம் இட்லி, கருப்பட்டி இட்லி, மசாலா இட்லி என பல வகை இட்லிகளை நம் வீட்டுப் பெண்கள் செய்து அசத்துவதை நாம் காண்கிறோம். இப்பொழுது நாம் சுவை மிகுந்த மிருதுவான பனானா இட்லி எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

ரவை                  1 கப் 

பழுத்த வாழைப்பழம்   2

தேங்காய் துருவல்        ¼ கப் 

சர்க்கரை                           ½ கப்

ஏலக்காய் பவுடர்            ½ டீஸ்பூன் 

தயிர்                                   ½  கப் 

உப்பு  ஒரு சிட்டிகை 

பேக்கிங் சோடா             ¼ டீஸ்பூன் 

தண்ணீர் தேவையான அளவு 

நெய் தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வாழைப்பழங்களை மசித்துப்போட்டு அதனுடன் ரவை, சர்க்கரை, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். பின் அந்த கலவை இட்லி மாவு பதத்திற்கு வரும்படி தேவையான தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். பின் தேங்காய் துருவல், ஏலக்காய் பவுடர்.

இதையும் படியுங்கள்:
மழைக்கால நோய்களைப் போக்கும் ஆயுர்வேத மூலிகைகள்!
healthy idly recipes...

உப்பு சேர்த்து கலந்து, மாவை அப்படியே பதினைந்து நிமிடங்கள் மூடி வைத்துவிடவும். இந்த நேரத்தில் ரவை மற்ற பொருள்களின் மணம் மற்றும் சுவையுடன் ஒன்று சேர்ந்துவிடும். இட்லிகளை வேகவைப்பதற்கு முன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலக்கவும். இது இட்லி நன்கு உப்பி வர உதவும். பின் இட்லி பாத்திரத்தில் நெய் தடவி மாவை ஊற்றவும். இட்லி குக்கரை அடுப்பில் ஏற்றி, மீடியம் தீயில் பத்து நிமிடம் வரை ஆவியில் இட்லிகளை வேக விடவும். பின் அடுப்பை அணைத்து விட்டு இரண்டு நிமிடம் கழித்து இட்லிகளை எடுக்கவும். 

சூடான பனானா இட்லி மீது வெல்லப்பாகு அல்லது தேன் அல்லது நெய் தெளித்து எக்ஸ்ட்ரா சுவையுடன் பனானா இட்லிகளை உண்ணவும். இதை ஆரோக்கியம் நிறைந்த காலை உணவாகவும், ஸ்னாக்ஸாகவும் உண்டு மகிழலாம். இதன் மிருதுவான டெக்சரும் சுவையும் எல்லா வயதினரையும் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி உண்ணத் தூண்டும்!!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com