
மழைக்கு வாய்க்கு ருசியான ஸ்நாக்ஸ் கேட்டு தொந்தரவு செய்யும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ரெசிபி இது. செய்வதற்கு எளிதானதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த பிரட் அடை.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 3
வெங்காயம்- 3
பிரட் - ஒரு பாக்கெட்
கரம் மசாலா - சிறிது
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் (தேவைப்பட்டால் மட்டுமே) கடுகு உளுந்து - தாளிக்க
கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிது பெருங்காயம் - ஒரு சிட்டிகை உப்பு எண்ணைய் - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்குகளை நன்கு கழுவி வேகவைத்து கட்டிகளின்றி மசித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதனுடன் அரிந்த வெங்காயம், கரம் மசாலா, உப்பு போட்டு நன்கு வதக்கவும் பின்பு மசித்த உருளையை சேர்த்துக் கிளறி எடுத்து வைக்கவும். ரொட்டித் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு தண்ணீரில் நனைத்து பிழிந்து பிசைந்து கொள்ளவும். இந்த ரொட்டிக் கலவையை சிறிய உருண்டைகளாக்கி கைகளில் லேசாக தட்டி நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மூடி அடுப்பில் வைத்த தோசைக்கல் காய்ந்ததும் உருண்டையை தட்டிப் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சிவக்க எடுக்கவும். மழைக் காலத்தில் குழந்தைகளுக்கேற்ற சத்தான ஸ்நாக்ஸ் இது.