Curry leaves
Curry leaves

கருவேப்பிலை குழம்பு! வெங்காயம் இல்லை! பூண்டு இல்லை!

Published on

தேவையான பொருட்கள்

1.கருவேப்பிலை - 3 கைப்பிடி அளவு
2.மிளகு - 1 டீஸ்பூன்
3.சீரகம் - 1 டீஸ்பூன்
4.சோம்பு - 1 டீஸ்பூன்
5.கசகசா - 1/2 டீஸ்பூன்
6.தேங்காய் துருவல் - 1 டீஸ்பூன்
7.புளி - பெரிய நெல்லி அளவு
8.மிளகாய்தூள் - 1/4 டீஸ்பூன்
9.உப்பு - தேவையான அளவு
10.நல்லெண்ணெய் - 1 1/2 குழிகரண்டி

செய்முறை

1.புளியை ஊறவைத்து கரைத்து கெட்டியாக சாறு எடுத்து கொள்ளவும்.

2.வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு,சீரகம்,சோம்பு,கசகசா ,
தேங்காய் துருவல், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

3.பின்னர் மிளகு கலவையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்

4.பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.மிளகாய்தூள் ,சேர்க்கவும்.

5.நன்றாக வதங்கியபின் புளிகரைசல் ,உப்பு சேர்த்து கொதித்த பின் மிதமான தீயில் வைத்திருக்கவும்.

6.குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

logo
Kalki Online
kalkionline.com