கேரட் பாசந்தி!

கேரட் பாசந்தி!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையானவை:

பசும் பால் - 4 கப்

துருவிய கேரட் - அரை கப்

பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 5

சர்க்கரை - ஒரு கப்.

செய்முறை:

பாதாம், பிஸ்தா, முந்திரியை சிறிதளவு பசும் பாலில் ஊற வைத்து கேரட் துருவல் சேர்த்து மையாக அரைக்கவும். மீதமுள்ள பாலை அடி கனமான பாத்திரத்தில் விட்டு சுண்டக் காய்ச்சவும். ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு சர்க்கரை, அரைத்த கேரட் விழுது சேர்த்து மீண்டும் நன்கு கிளறி இறக்கினால், சுவையான, சத்தான கேரட் பாசந்தி தயார்!

logo
Kalki Online
kalkionline.com