
தேவையான பொருட்கள்:
சிறிய காலிஃப்ளவர் - 1, பெரிய வெங்காயம் - 3, பழுத்த தக்காளி - 2, பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 4, இஞ்சி (பொடியாக நறுக்கியது) 2 ஸ்பூன், கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, பாசிப்பருப்பு – ½ கப், கடலைப் பருப்பு - 1 மேஜைக் கரண்டி, புளி - 1 எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ற அளவு, கடலை மாவு - 1 மேஜைக் கரண்டி, கடுகு + உ.பருப்பு - 2 ஸ்பூன்.
செய்முறை:
காலிஃப்ளவர், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியில், கடுகு உளுத்தம் பருப்பைத் தாளிதம் செய்தவுடன் நறுக்கிய பொருட்களையும், பச்சைப் பட்டாணி முத்துக்கள் மற்றும் தக்காளித் துண்டுகளைப் போட்டு, வதக்கவும். பின் தேவைக்கேற்ப உப்பையும், சாம்பார் பொடியையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். குக்கரில் கடலைப் பருப்பு மற்றும் பாசிப் பருப்பைப் போட்டு இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
இரண்டு நிமிடத்துக்கு வெயிட் போட்டு, பாதி வெந்தவுடன் மேற்படி வதக்கல் கலவையை அதனுடன் சேர்க்கவும். புளிக்கரைசலுடன், கடலை மாவையும் தூவி மீண்டும் குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு 10 நிமிடம் சென்ற பின் குக்கரைத் திறந்து அனைத்தையும், கரண்டியால் மசிக்கவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.