மனச்சோர்வைப் போக்கும் கெமோமில் டீ!

Tea that relieves depression!
health awarnessImage credit - pixabay
Published on

சிலவகை பூக்கள் நம் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன. சாமந்தி பூ வகையைச் சேர்ந்த கெமோமில் (Chamomile) என்கிற பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. கிரீன் டீ போலவே இந்த கெமோமில் டீ அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக மக்கள் விரும்பும் பானமாக இருந்து வருகிறது.

கெமோமில் பூக்களை காயவைத்து பின் அதை. சுடுதண்ணீரில் போட்டு டீ தயாரித்து இந்தோனிஷிய மக்கள் அருந்துகின்றனர். அங்குள்ள மக்களில் பலர்  காஃபின் இல்லாத கெமோமில் டீயை விரும்பி அருந்துகின்றனர். கெமோமில் டீ குடிப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளை இப்பதிவில் பார்ப்போம்.

கெமோமில் டீ நம்முடைய நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளை அமைதியடையச் செய்வதால் தூக்கத்தை தூண்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. கெமோமில் டீ குடிப்பது ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு தேவையற்ற பதற்றத்தை தணித்து ரிலாக்ஸாக இருக்க உதவுகிறது. மேலும் இது கவலை மற்றும் மனச்சோர்வைப் போக்கும் மாமருந்தாக செயல்படுகிறது. கெமோமில் நோயைத் தடுக்கவும்  நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.

கெமோமில் டீ-யில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கின்றன.  கெமோமில் பூக்களில் APIGENIN  என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. ஆய்வுகளில் இந்த APIGENIN புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவது கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக மார்பகம், செரிமானப்பாதை, தோல், புரோஸ்டேட் மற்றும் கருப்பபை கேன்சர் செல்களை எதிர்த்து போராடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கே வித்திடுகிறது!
Tea that relieves depression!

கெமோமில் பூக்கள் உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்ட ஃபிளாவோன்ஸ்களை (flavones) கொண்டுள்ளது. மேலும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் வகையில் அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன. இவை தவிர சரும ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க கெமோமில் நல்லது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே கெமோமில் டீ முழு ஆரோக்கிய பானமாக கருதப்படுகிறது. பூ கிடைக்கவில்லை என்றாலும், இந்த பூவின்  டீ பவுடர்கள் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com