செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிப்பிகள்!

paal kozhukattai
paal kozhukattai
Published on

கருப்பட்டி ஆப்பம் 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்

உளுந்து - 3 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

சாதம் - 1 கப்

சோடா உப்பு - பெரிய பின்ச்

சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு ஏற்ப

கருப்பட்டி பால் - 1 கப்

செய்முறை:

அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்கு அலசி சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து  மிக்ஸியில் ஒரு முறை அல்லது இரு முறையாகவோ போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு, சோடா உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வைக்கவும்.  முதல் நாள் மாலை அரைத்தால் மறுநாள் காலை சுட சரியாக இருக்கும்.

குறைந்தது 8 - 10 மணி நேரம் மூடி வைக்கவும். மாவு ஒரு ஒன்னரை அல்லது இரண்டு இன்ச் அளவு பொங்கி கலக்கி பார்த்தால்  லேசாக இருக்கும்.கருப்பட்டி பால் சேர்த்து நன்கு கலந்து தோசை மாவை விட கொஞ்சம் இளகுவாக கரைத்து கொள்ளவும்

ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து நான்ஸ்டிக் ஆப்பச் சட்டி நன்கு காய்ந்த பின்பு மாவை ஊற்றவும். ஆப்பச் சட்டியின்  கைப்பிடியை பிடித்து மாவு வட்டமாக பரவுமாறு திருப்பி விடவும். பிறகு மூடி போடவும்.

சுற்றி லேசாக சிவந்து ஆப்பம் வெந்து வரும். கரண்டியை கொண்டு லேசாக சைடில் விட்டால் ஆப்பம் அப்படியே சூப்பராக  சட்டியில் இருந்து எழும்பி வரும். எடுத்து சூடாக பரிமாறலாம். நடுவில் ஸ்பாஞ்சாக சுற்றி முறுகலான ஆப்பம் தயார்.

karupatti appam
karupatti appam

பால் கொழுக்கட்டை

தேவையானப் பொருட்கள்;

1.பச்சரிசி மாவு.     :1 கப்

2.வெல்லம்.         : 1/2 கப்

3.பால்.        : 1/2 கப்

4.ஏலக்காய்.  : 3

5.தேங்காய் துருவல்.   : 3 ஸ்பூன்

6.நல்லெண்ணெய்.   : 2 டீஸ்பூன்

 செய்முறை:

1.பச்சரிசி மாவில் ஒரு தேக்கரண்டியளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து அதில் நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

2. அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

3.பச்சரிசிமாவை சிறிய சிறிய உருண்டை யாக உருட்டி கொதிக்கும் நீரில் போடவும்.

4. தண்ணீர் கொதிக்கும் முன்பு உருண்டை களை போட்டால் கரைந்து விடும்.

. கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டியளவு நல்லெண்ணெய் ஊற்றினால் உருண்டைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் வரும்.

6. உருண்டைகள் நன்றாக வெந்ததும் வெல்லத்தை கரைத்து வடிகட்டி ஊற்றவும்.

7. இதில் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.

8. தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தட்டி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.

9. வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டி, சர்க்கரை ( sugar) சேர்த்தும் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com