சில்லி சீஸ் பஜ்ஜி .....!

சில்லி சீஸ் பஜ்ஜி .....!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்

அரிசி மாவு – 1/4 கப்

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

பஜ்ஜி மிளகாய் – 6

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு…

வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

சீஸ் – 1 கப் (துருவியது)

உப்பு – சுவைக்கேற்ப

கொத்தமல்லி – 4 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் துருவிய சீஸ், நறுக்கிய வெங்காயம், நறுக்கியகொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் பஜ்ஜி மிளகாயை கீறி அதனுள் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, உள்ளே சீஸ் கலவையை வைக்க வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், உப்பு, பேக்கிங் சோடா, பெருங்காயத் தூள் சேர்த்து, தேவையான அளவுநீரை ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையானஅளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், சீஸ் வைத்த மிளகாயை பஜ்ஜி மாவில் பிரட்டிஎண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறு மொறுப்பான சில்லி சீஸ் பஜ்ஜி தயார்.

logo
Kalki Online
kalkionline.com