
சாக்லேட் வார்த்தையைக் கேட்டாலே குழந்தைகளுக்கும் வயது பெண்களுக்கும் மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகளுக்கு கொண்டாட்டம்.
பிறந்தநாள் மற்றும் மணநாள் என்றால் எந்த பொருள் வாங்கி தந்தாலும் தராவிட்டாலும் சாக்லேட் வாங்கி வந்தால் பெருமகிழ்ச்சி கொள்வார்கள் இவர்கள்.
பரீட்சையில் பாஸா? இதோ சாக்லெட் ஆபிஸ்ல பிரமோஷன்? இதோ சாக்லேட் என்று தருவார்கள். அந்த சாக்லேட் நாம் வீட்டிலேயே தயாரித்தால் என்ன?
பிரௌனி சாக்லேட் செய்முறை பற்றி பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்:
டார்க் சாக்லேட் 200 கிராம் 2. வெண்ணெய் அரை கப் சர்க்கரை ஒரு கப். முட்டை இரண்டு, ஆல் பர்ப்பஸ் பிளவர் அரை கப் கோகோ பவுடர் அரை கப் உப்பு ஒரு சிட்டிகை மற்றும் வெண்ணிலா எசன்ஸ்.
செய்முறை விளக்கம்:
முதலில் சாக்லேட் பார்கள் துண்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் அரை கப் வெண்ணையும் நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
இரண்டாவதாக ஒரு பாத்திரத்தில் சர்க்கரை எடுத்து அதனுடன் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அவை கிரீம் போல வரும் வரை நன்றாக கலக்கிக் கொள்ளவும். அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, வெண்ணிலா எசன்ஸ் தேவையான அளவு சேர்த்தவுடன் சாக்லேட் மிக்சர் மற்றும் அதனுடன் முட்டைக் கலவையை சேர்த்து நன்றாகக்கிளறி கலந்து கொள்ளவும்.
கலந்து முடித்தவுடன் ஆல் பர்ப்பஸ் பிளேவருடன் கோகோ பவுடரையும் சேர்த்து ஒரு சிறிய கத்தியால் கிளறி நன்றாக கலக்கவும்.
கலக்கி முடித்தவுடன் ஒரு அலுமினிய டிரே அல்லது எவர்சில்வர் டிரேயில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். பின் பார்ச்மென்ட் பேப்பரை டிரேயில் பரப்பி அதனில் சாக்லேட் கலவையை பரப்பி வைத்து விட்டு ஒவனை நூற்று தொண்ணூறு டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைக்கவும் இருபது நிமிடம் அல்லது இருபத்தைந்து நிமிடங்களுக்கு பிறகு அவனில் இருந்து இறக்கி சற்று காற்றாட விடவும்.
டிரேயில் உள்ள பிரௌனி சாக்லேட் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் மேல் வால்நட் தூவி அழகுப்படுத்துங்கள்.
இப்போது பிரௌனி சாக்லேட் சாப்பிட குழந்தைகளை கூப்பிடுங்கள் ஆவலோடு ஓடி வருவார்கள். நீங்களும் செய்துதான் பாருங்களேன் பிரௌனி சாக்லேட்.