நறுக் உருளைக்கிழங்கு ஊறுகாயும், சுருக் பச்சை மிளகாய் ஊறுகாயும்!

healthy pickles...
healthy pickles...Image credit - youtube.com
Published on

ருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது. நமக்கு சமையல் விரைவில் முடிய கை கொடுக்கும் ஒரு பொருள் உருளைக்கிழங்கு மட்டும்தான். இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் இருந்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி  செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலைத் தடுக்கும் சத்துக்கள் நிறைந்த உருளைக்கிழங்கு வெறும் பொரியலுக்கும் வறுவலுக்கும் மட்டும் தானா? இல்லை. ஊறுகாய்க்கும் இதை பயன்படுத்தலாம்.

அதேபோல் பச்சை மிளகாய் இல்லாத சமையல் எது?  பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் சி சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இதில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.

 உருளைக்கிழங்கு ஊறுகாயும் பச்சை மிளகாய் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

உருளைக்கிழங்கு ஊறுகாய்

தேவை;

உருளைக்கிழங்கு - அரை கிலோ எலுமிச்சம் பழம் - 12
மிளகாய் தூள் - மூன்று டேபிள் ஸ்பூன் உப்பு -தேவைக்கு
கடுகு பொடி - 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தூள் -25 கிராம்
வெள்ளைப் பூண்டு -ஒரு கட்டி பெருங்காயம் -ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா- ஒரு டீஸ்பூன்
கடுகு -ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் -ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் - கால் லிட்டர்

செய்முறை;
கெட்டியான உருளைக்கிழங்குகளை நன்றாக மண் போக நன்றாக கழுவி ஈரத்தினை துடைத்துவிட்டு தோலுடனே சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம். பாதி எண்ணெயை கொதிக்க வைத்து அந்த எண்ணெயில் கிழங்கு துண்டுகளை சிறிது நேரம் போட்டு அப்படியே வைத்திருக்கவும். உப்பு, கடுகுப்பொடி, மிளகாய் பொடி, வெந்தயப் பொடி இவற்றை கலந்து ஊறும் உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். இரண்டு நாட்கள் அப்படியே ஊறியதும் மூன்றாவது நாள் எலுமிச்சை பழங்களைப் பிழிந்து சாற்றை ஊற்றவும். சிறிது எண்ணெயில் கடுகு, தட்டிய வெள்ளைப்பூண்டு, கரம் மசாலா, மஞ்சள் தூள் போன்ற சாமான்களை தாளித்துக் கொட்டவும். மீதி உள்ள எண்ணெயை உருளைக்கிழங்கு மூழ்கும் வரை ஊற்றவும். ஒரு வாரம் வெயிலில் இந்த கலவையை வைத்து எடுத்து ஒரு மாதம் கழித்து நன்றாக ஊறிய பின் உபயோகிக்கலாம். உருளைக்கிழங்கு நறுக் பதத்துடன் சாப்பிட வித்யாசமாக இருக்கும்.

பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவை;

பச்சை மிளகாய் - அரை கிலோ
உப்பு-  தேவைக்கு
வெந்தயம்- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -  1 டீஸ்பூன்
புளி - தேவையான அளவு
எள்-  2 ஸ்பூன்
கடுகு - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - கால் லிட்டர்

இதையும் படியுங்கள்:
நன்றை செய்க... அதை இன்றே செய்க!
healthy pickles...

செய்முறை:

பழுக்காத கெட்டியான பச்சை மிளகாயைக் கழுவி காம்பை நீக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கெட்டியான புளிக்கரைசல் வடிகட்டி எடுத்து வைக்கவும். மிளகாயை இரண்டாகக் கீறிக்கொண்டு எண்ணெயில் வதக்கி புளிக்கரைசலை ஊற்றி பச்சை புளி வாசனை போகும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். சிவக்க வறுத்து பொடி செய்த வெந்தயம், கடுகு, எள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். எண்ணெய் மிதங்குமாறு அதிகம் சேர்க்கவும்.   இதில் உள்ள பச்சை மிளகாய் காரம்,  புளி இரண்டும் சேர்ந்து வித்தியாசமான சுவை நிச்சயம் தரும். தயிர் சாதத்திற்கு தொட்டு சுருக்கென்று சாப்பிட நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com