மொறுமொறு கேரளா ஸ்டைல் சோயா 65 செய்து சாப்பிடுவோமா?

Soya 65
Soya 65

தயிர் சாதம் செய்துவிட்டு தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்போது இந்த மொறுமொறு சோயா 65 செய்துப் பாருங்கள். காம்பினேஷன் அள்ளும். தயிர் சாதத்திற்கு மட்டுமல்ல சாம்பார் சாதம், கட்டு சாதம் போன்ற அனைத்திற்குமே இந்த சோயா 65-ஐ செய்து சாப்பிடலாம். அதுமட்டுமல்ல, மாலை நேரத்தில் இந்த சோயா 65 செய்து அதனுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவுத்தான் நாக்கு அந்த சுவைக்கு அடிமையாகிவிடும்.

தேவையானப் பொருட்கள்:

 • மீல் மேக்கர்( Soya chunks)

 • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்

 • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்

 • 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்

 • 1 டீஸ்பூன் இஞ்சிப் பூண்டு விழுது

 • 1 டீஸ்பூன் உப்பு

 • 1 டீஸ்பூன் கரமசாலா

 • 2 டீஸ்பூன் மைதா

 • 2 டீஸ்பூன் கார்ன்ஃபலவர் மாவு

 • தேவையான அளவு எண்ணெய்

 • தண்ணீர்

 • பச்சை மிளகாய்

 • கருவேப்பிலை

செய்முறை:

1.  முதலில் ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி அதில் மீல் மேக்கரை வேக வைக்கவும்.

2.  மீல் மேக்கர் மென்மையாக வெந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு  மீல் மேக்கரை மட்டும் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். பாதி நீரை மீல் மேக்கரே உறிஞ்சிவிடும். மீதி இருக்கும் நீரை வடிக்கட்டிவிட்டு மீல் மேக்கரை தனியாக எடுத்து குளிர வைக்கவும்.

3.  இப்போது அந்த மீல் மேக்கர் மேல், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கை வைத்து நன்றாக கலக்க வேண்டும்.

4.  அதனுடன் மைதா மாவு மற்றும் கார்ன் பிளவர் மாவையும் சேர்த்து, நன்றாக கலந்து வைத்து ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துவிடவும்.

இதையும் படியுங்கள்:
ரோட்டுக்கடையில் சாப்பிடும் காளான் ரெசிபியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க!
Soya 65

5.  அதன்பின்னர் ஒரு கடாயில் வறுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். மிதமான சூட்டில் அடுப்பை எரிய விட்டு எண்ணெயில், ஊறவைத்த மீல் மேக்கரை ஒவ்வொன்றாகப் போட வேண்டும். அனைத்தையும் எண்ணெயில் போட்டு ஒரு 75 சதவீதம் அளவு மீல் மேக்கரை வறுத்த பின்னர் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு வடிக்கட்டி மீல் மேக்கரை எடுத்து விட வேண்டும்.

இதனுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் சோயா 65யின் சுவை தாறுமாறாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com