நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

பசுமைத் தட்டை
பசுமைத் தட்டைyoutube.com

பசுமைத் தட்டை

தேவை: பச்சரிசி மாவு 4 கப், பொட்டுக்கடலை மாவு - 2 கப், வறுத்தரைத்த உளுத்தம் மாவு -  1 கப், புதினா - 1 கட்டு, கொத்துமல்லி - ½ கட்டு, பச்சை மிளகாய் - 4, பூண்டு - 4 பல், நெய் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: ஆய்ந்து சுத்தம் செய்த புதினா, மல்லி, பூண்டு, மிளகாயை நைசாக அரைக்கவும். லேசாக வறுத்த அரிசி மாவுடன் இதர மாவுகள், அரைத்த விழுது, உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து தட்டைகளாக எண்ணெயில் பொரிக்கவும்.

- பத்மாவதி ஸ்ரீநிவாசன், சென்னை

 

ஓமம் முறுக்கு

தேவை: பச்சரிசி, பொட்டுக்கடலை - தலா 1 கப், பாசிப் பருப்பு - ½ கப் ஓமம் - 1 டேபிள்ஸ்பூன், சீரகம்-1 டீஸ்பூன், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், எண்ணெய்- தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர்க்கு டூர் போறீங்களா? அப்போ இந்த 10 இடத்த மிஸ் பண்ணிடாதீங்க!
பசுமைத் தட்டை

செய்முறை: அரிசி, பருப்பைத் தனியாக வறுத்து, மிஷினில் அரைக்கவும். அரைத்த ஓமம், சீரகப் பொடியுடன் உப்பு, காரம், பெருங்காயம் எல்லாவற்றையும் மாவில் சேர்த்து நீர் விட்டுப் பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழியவும்.

- ஆர்.பத்மப்ரியா, ஹூப்ளி

கார முறுக்கு

தேவை: பச்சரிசி, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு - தலா 1 கப், உப்பு, காரத்தூள், பெருங்காயம், எண்ணெய் தேவைக்கு.

கார முறுக்கு
கார முறுக்குyoutube.com

செய்முறை: அரிசி, பருப்பை மிஷினில் அரைத்துச் சலிக்கவும். அதில் இதரப் பொருள்கள் சேர்த்து நீர் விட்டு பந்துபோல் பிசையவும். தேவையான முறுக்கு அச்சில், மாவைப் போட்டுக் காய்ந்த எண்ணெயில் பொரிக்கவும்.

- ஆர்.சுபா, ஈரோடு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com