நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

உருளை, சிப்ஸ்
உருளை, சிப்ஸ்

உருளை,  தக்காளி சிப்ஸ்

தேவை: உருளைக்கிழங்கு - 4, தக்காளி பவுடர் - ½ டீஸ்பூன், மிளகாய்த்தூள் -
¾ டீஸ்பூன், பெருங்காயம் - ¼ டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - சிறுதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: தோல் சீவி, அலம்பிய கிழங்கை சிப்ஸ் கட்டையில் சீவி, எலுமிச்சைச் சாறு கலந்த தண்ணீரில் போடவும். வடித்த காயை ஈரம் போக உலர்த்தி எண்ணெயில் பொரிக்கவும். அதில் தக்காளிப் பவுடர், உப்பு, காரம், பெருங்காயம் சேர்க்கவும்.

- க.இராஜேஸ்வரி கண்ணன், மணப்பாறை

 சோயா ஸ்டிரிப்ஸ்

தேவை: அரிசி மாவு -1 கப், சோயா மாவு, கடலை மாவு - தலா ½ கப், மிளகாய்த் தூள் - ½ தேக்கரண்டி, பெருங்காயம் - ¼ தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
சருமப் பொலிவைக் காக்கும் சத்தான உணவுகள்!
உருளை, சிப்ஸ்

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். ஒரு கரண்டி காய்ந்த எண்ணெயை மாவில் ஊற்றி, தேவைப்பட்டால் நீர் சேர்த்துப் பிசையவும். ரிப்பன் நாடா அச்சில் மாவைப் போட்டு, நீளமான பிளாஸ்டிக் ஷீட்டில் பிழிந்து, பிறகு ஓர் அங்குல நீளத்தில் வெட்டிப் பொரிக்கவும்.

- உஷா, சென்னை

பட்டர் கை முறுக்கு

பட்டர் கைமுறுக்கு
பட்டர் கைமுறுக்கு

தேவை: அரிசி மாவு - ½ கப், வறுத்தரைத்த உளுந்து மாவு - ½ டேபிள் ஸ்பூன், வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கேசரி பவுடர் - 1 சிட்டிகை, சீரகம் -1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவைக்கு.

செய்முறை: மாவுடன் மற்ற எல்லாப் பொருள்களையும் சேர்த்து நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். மெல்லிய கைமுறுக்காக பேப்பரில் சுற்றி வைக்கவும். ஈரம் சற்றுக் காய்ந்ததும் எண்ணெயில் பொரிக்கவும்.

- வே.சச்சின்,திருவண்ணாமலை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com