நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

சிவ்டா
சிவ்டாImage credit - youtube.com

சிவ்டா

தேவை: அவல் – 100 கிராம், முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, சீவிய கொப்பரை, பொடித்த சர்க்கரை - தலா 25 கிராம், காரம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் ற- தேவைக்கு.

செய்முறை: மிதமான சூட்டில் அவல், முந்திரி, கறிவேப்பிலை பொரிக்கவும். இவற்றோடு கடலைகள், உப்பு, மிளகாய், கொப்பரை, பெருங்காயம் சேர்க்கவும். கடைசியில் பொடித்த சர்க்கரை சேர்க்க வும்.

- பத்மா சம்பத், சென்னை

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் எந்த வித வண்ணங்களில் உடை அணிந்தால் இதமாக இருக்கும் தெரியுமா?
சிவ்டா

காரம் போட்ட கர்ச்சிக்காய்

தேவை: பொட்டுக்கடலை - ¼ கிலோ, அரிசி மாவு- 400 கிராம், துருவிய கொப்பரை- 100 கிராம், காரத்தூள், கசகசா - தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய்-தேவைக்கு.

செய்முறை: பொட்டுக்கடலை, கொப்பரை, கசகசா மூன்றையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். கொதிக்கும் நீரில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து, அரிசி மாவைக் கொட்டி கொழுக்கட்டை மேல்மாவு பதத்துக்கு வேகவைக்கவும். மேல் மாவில் சொப்புகள் செய்து, பூரணத்தை நிரப்பி சோமாஸ் வடிவில் தயார் செய்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

- ரோஷிணி, மும்பை

காரத் துக்கடா

காரத் துக்கடா
காரத் துக்கடாImage credit - youtube.com

தேவை: மைதா மாவு - ½ கிலோ, வெண்ணெய் - 75 கிராம், ஓமவல்லி இலை விழுது - 1 கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: வெண்ணெயைச் சூடுபறக்க நன்கு தேய்த்து, மாவு, வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலந்து, இலை விழுது, தேவைப்பட்டால் நீர் தெளித்துப் பிசைந்து கால் மணி நேரம் ஊறவிடவும். சப்பாத்திகளாக இட்ட மாவை டயமண்ட் வடிவத்தில் வெட்டிப் பொரிக்கவும்.

- எஸ்.சுகந்தி சுந்தர். கீவளூர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com