நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

தேங்காய்ப்பால் சீடை
தேங்காய்ப்பால் சீடைwww.youtube.com
Published on

தேங்காய்ப்பால் சீடை

தேவை: அரிசி - ½ கிலோ, உளுந்து - 50 கிராம், வெண்ணெய் - 200 கிராம்.  தேங்காய்ப் பால் -1 தம்ளர், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: மிஷினில் அரிசி, உளுத்தம் பருப்பைச் சேர்த்து அரைக்கவும் (பொடி). சலித்த மாவில் வெண்ணெய் சேர்த்து, தேங்காய்ப் பால் ஊற்றிப் பிசைந்து, உப்பு சேர்க்கவும், சிறிய உருண்டைகளாக உருட்டி, பொன்னிறமாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

- பிரேமா சாந்தாராம், சென்னை

 

பொட்டேட்டோ சக்லி

தேவை: உருளைக்கிழங்கு - 4, மைதா மாவு – 1 கப், அரிசி மாவு – 1 கப், ப.மிளகாய் (விழுது) - 2 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
கண்களை அழகுப்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை!
தேங்காய்ப்பால் சீடை

செய்முறை: வெந்த கிழங்கை மசிக்கவும். ஆவியில் வெந்த மைதா மாவில், உப்பு, காரம், கிழங்கு சேர்த்துக் கட்டியில்லாமல் பிசையவும். முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழியவும்.

- சித்ரா கோபிநாத், காரைக்கால்

பீட்ரூட் பகோடா

தேவை: தோல் சீவி துருவிய பீட்ரூட் - 1 கப், துவரம் பருப்பு – 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 2 (நறுக்கியது). இஞ்சி விழுது - ½ டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி தலா சிறிதளவு, உப்பு. எண்ணெய் - தேவைக்கு.

பீட்ரூட் பகோடா
பீட்ரூட் பகோடாwww.youtube.com

செய்முறை: ஊறிய து.பருப்பை வடிய வைத்து, உப்பு, காரம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். வெங்காயம், பீட்ரூட் இவற்றைச் சேர்த்து, கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

- பத்மினி கிருஷ்ணன், ஜாம்ஷெட்பூர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com