நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

கார பிஸ்கட்
கார பிஸ்கட்youtube.com

ஜவ்வரிசி கார பிஸ்கட்

தேவை: ஜவ்வரிசி - 1 கப், மைதா - ¼ கப், பொடித்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: வறுத்த ஜவ்வரிசியை மிக்ஸியில் பொடியாக்கவும். இந்த ஜவ்வரிசி பொடியில் இதரப் பொருள்களைச் சேர்த்து, நீர் விட்டுப் பிசையவும். பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெயைத் தடவி, தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

- லக்ஷ்மி சந்தானம், ஸ்ரீரங்கம்

ஆப்பிள் ரிப்பன்

தேவை: ஆப்பிள் துண்டுகள் - 8, கடலை மாவு, அரிசி மாவு - தலா 1 கப், வெண்ணெய் - 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
இந்த ஒன்றை மட்டும் விட்டுக் கொடுத்து பாருங்களேன்! வாழ்க்கை மகிழ்ச்சியாகும்!
கார பிஸ்கட்

செய்முறை : தோல் சீவிய ஆப்பிள் துண்டுகளை நன்கு அரைக்கவும். மாவுகள், வெண்ணெய், உப்பு, காரம் சேர்த்து பழக்கலவையில் கலக்கவும். ரிப்பன் நாடா அச்சில் மாவைப் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழியவும்.

- கீதா மூர்த்தி, ஒசூர்

வாழைக்காய் சாப்ஸ்

தேவை: வாழைக்காய் - 2, கோதுமை மாவு - 4 டீஸ்பூன், சின்ன வெங்காயம், பூண்டுப் பல் - தலா 4, பொடித்த வறுகடலை - 2 டீஸ்பூன், உப்பு, சீரகம், எண்ணெய் - தேவைக்கு.

வாழைக்காய் சாப்ஸ்
வாழைக்காய் சாப்ஸ்niyasworld.blogspot.com

செய்முறை: தோல் நீக்கி நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய காயை சுடுநீரில் ஒரு கொதி விட்டு வடிகட்டவும். அரைத்த வெங்காயம், பூண்டு விழுதுடன் மற்றவற்றைச் சேர்த்துக் கலந்து, எண்ணெயில் பொரித்தெடுக் கவும்.

- ஜெ.ஸ்ரீகாந்தி ஜனக்குமார், காஞ்சிபுரம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com