என்னது! வெள்ளரிக்காய் வைத்து ரொட்டி செய்யலாமா?

Cucumber Rotti.
Cucumber Rotti.

இதுவரை வெள்ளைக்காய் பயன்படுத்தி சாலட், ஜூஸ், பொரியல் போன்றவற்றை மட்டுமே செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் அதைப் பயன்படுத்தி ரொட்டி கூட செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் வெள்ளரிக்காய் பயன்படுத்தி ஆரோக்கியமான ரொட்டி செய்யலாம். இது செய்வது மிகவும் சுலபம், அதே நேரம் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக இது இருக்கும். 

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் - 1

கொத்தமல்லித் தழை- சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - தேவையான அளவு

கோதுமை மாவு - 1 கப்

செய்முறை 

முதலில் பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளரிக்காயை தோலை நீக்கி பொடியாக துருவிக் கொள்ளுங்கள். 

ஒரு பாத்திரம் எடுத்து அதில் துருவிய வெள்ளரிக்காய், கோதுமை மாவு, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். பிசைந்த மாவை குறைந்தது அரை மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
ரொட்டி வெஜ் ரோல்!
Cucumber Rotti.

அடுத்ததாக அடுப்பில் தோசை கல் வைத்து அதுபோதுமான அளவு சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை ரொட்டி போல தட்டி தோசைக் கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சிறிது நேரத்திலேயே சூப்பர் சுவையான ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ரொட்டி ரெடி. 

இதை அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். அல்லது சாம்பார் சட்னி போன்றவற்றை சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். இந்த ஆரோக்கியமான காலை உணவை, நிச்சயம் ஒருமுறையாவது முயற்சித்துப் பாருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com