
கறிவேப்பிலை சாட்:
கடலை மாவு 1/2 கப்
அரிசி மாவு 1/4 கப்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
ஓமம் 1 ஸ்பூன்
பெருங்காயம் 1/4 ஸ்பூன்
சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
கறிவேப்பிலை 2 கைப்பிடி
எண்ணெய் பொரிக்க
அலங்கரிக்க (ட்ரெஸ்ஸிங்):
தயிர் கடைந்தது 4 ஸ்பூன்
புளி சட்னி 1 ஸ்பூன்
க்ரீன் சட்னி 1 ஸ்பூன்
சீரகத்தூள் சிறிது
உப்பு (black salt) சிறிது
மிளகாய்த்தூள் 2 சிமிட்டு
கொத்தமல்லி சிறிது
மாதுளை முத்துக்கள் 1 கைப்பிடி
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், ஓமம், சீரகத்தூள், கறிவேப்பிலையை கிள்ளாமல் முழுவதுமாக போட்டு, உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை கையால் எடுத்து கிள்ளிப் போட்டு இருபுறமும் நன்கு மொறுமொறுப்பானதும் எடுத்து விடவும்.
ஒரு தட்டில் பொரித்த கறிவேப்பிலை குணுக்குகளைப் போட்டு அதன் மேல் நன்கு கடைந்த கெட்டி தயிரை சேர்த்து மேலாக சீரகத்தூள், புளி சட்னி, கொத்தமல்லி சட்னி, பிளாக் சால்ட், மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி, மேலாக சிறிது மாதுளை முத்துக்களை வைத்து பரிமாற மிகவும் ருசியான கறிவேப்பிலை சாட் தயார்.
காரைக்குடி கார சட்னி:
பூண்டு 15
சின்ன வெங்காயம் 10
புளி சிறிய எலுமிச்சை அளவு
உப்பு தேவையானது
தக்காளி 2
மிளகாய் வற்றல் 6
சர்க்கரை 1/2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, நல்லெண்ணெய்
பூண்டு, சின்ன வெங்காயம், மிளகாய், உப்பு, புளி, நறுக்கிய தக்காளி எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்ததை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு அரை கப் தண்ணீர்விட்டு ஒரு கொதி வந்ததும் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இறக்க ருசியான சட்னி தயார். இட்லி, தோசை, பஜ்ஜி, போண்டா, தயிர் சாதம் என எல்லாவற்றிற்கும் பொருத்தமான சட்டினி இது.