
தேவை: நல்ல கெட்டித் தயிர் – 3 கப், சுத்தம் செய்த பொடி கோதுமை ரவை – 2 கப், மிளகு – சீரகப் பொடி – 1 டீஸ்பூன், பெருங்காயப் பொடி – ¼ டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6, இஞ்சி – 1 துண்டு, ஃப்ரெஷ் கொத்துமல்லி இலை – 1 கப், ரீஃபைண்டு ஆயில் – ¼ லிட்டர், தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பூ – 1 கப், உப்பு – தேவையானது.
செய்முறை: முதலில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்துமல்லி இலை ஆகியவைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு மெல்லிய துணியில் கெட்டித் தயிரை விட்டு, கட்டித் தொங்கவிட, தண்ணீர் வடியும். பிறகு அதை ஒரு பாத்திரத்தில் போடவும்.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்ப் பூ, சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, தயிரில் கலந்து கொள்ளவும்.
பிறகு பெருங்காயப் பொடி, மிளகு – சீரகப் பொடி, கோதுமை ரவை, தேவையான உப்பு, கொத்துமல்லி இலை ஆகியவைகளையும் தயிரில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவும். ரவை தயிரில் ஊறி விட, கெட்டியாக வடை மாவு பதத்தில் இருக்கும்.
அடுப்பில் வாணலியை வைத்து, ரீஃபைண்டு ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்துவிட்டு காய விடவும். இதில் தயார் செய்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறு சிறு பந்து போல உருட்டி நான்கு நான்காக மெதுவாகப் போட்டு பொன்னிறமாக வெந்தபின் வெளியே எடுக்கவும். கம கம வாசனையுடன் சுவையாக இருக்கும். இந்த ஸ்பெஷல் கோல் வடாவிற்கு, சட்னி தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.
குல்கந்து மிக்ஸ்ட் வெற்றிலை ஐஸ்க்ரீம்!
தேவை: குல்கந்து – 2 டேபிள் ஸ்பூன், நல்ல வெற்றிலை – 3, கோயா – 3 டேபிள்ஸ்பூன், பெருங்சீரகம் – 1 டீஸ்பூன், மீட்டா பான் – 1, நல்ல பால் – 2½ கப், சர்க்கரை – ¼ கப், பச்சைஏலம் (பொடி செய்தது) – 1 டீஸ்பூன்.
செய்முறை: கனமான வாணலி ஒன்றை அடுப்பின் மீது வைத்து பாலை அதில் விட்டு மிதமான சூட்டில் நன்றாக காயவிட்ட பிறகு அடுப்பை அணைக்கவும். இதில் சர்க்கரை மற்றும் கோயாவை சேர்த்து மிக்ஸ் செய்து, அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறவிடவும்.
பெருங்சீரகம், குல்கந்து, வெற்றிலை, மீட்டா பான், ஏலம் ஆகியவற்றை Blenderஇல் போட்டு பேஸ்ட் போல் ஆக்கி, ஆறிய பால் கலவையில் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றுபோல் மிக்ஸ் செய்யவும். சின்ன சின்ன கண்டெய்னரில் இந்த மிக்ஸை கொஞ்சமாகப் போட்டு இரவு முழுவதும் Freezerஇல் வைத்து, மறுநாள் லஞ்சிற்குப் பின் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
ஸ்வீட் பொடேடோ ஸ்பெஷல்!
தேவை: சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 250 கிராம், கேரட் – 100 கிராம், கோதுமை மாவு – 2 கப், ரவை – ½ கப், பால் – 1 கப், வாழைப்பழம் – 2, பொடித்த வெல்லம் – ½ கப், வறுத்த வேர்க்கடலைப் பொடி – 1 கப், மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன், ஏலப்பொடி – ½ டீஸ்பூன், நெய் – 1 கப், உப்பு – தேவையானது, தண்ணீர் – கொஞ்சம்.
செய்முறை: முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட் ஆகியவைகளின் தோல் சீவி வேகவிட்டு மசித்துக் கொள்ளவும். வாழைப்பழத்தையும் தோல் நீக்கி மசிக்கவும். கோதுமை மாவுடன், ரவை மற்றும் சிறிது உப்பு சேர்த்து, பால், சிறிது நெய், தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து 10 நிமிடங்கள் தனியே வைக்கவும்.
மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு – கேரட், வாழைப்பழம் இத்துடன் வெல்லப்பொடி, வேர்க்கடலைப் பொடி, மிளகாய்ப்பொடி, ஏலப்பொடி கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
கோதுமை மாவு – ரவை கலவையை சப்பாத்திக்கு உருட்டுவதுபோல, எலுமிச்சை அளவில் உருட்டி, பூரி போல் முதலில் இட்டு, வாழைப்பழக் கலவை உருண்டை ஒன்றை வைத்து நன்கு மூடி மீண்டும் மெதுவாக இடவும். சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக ஆனதும், நெய் தடவிச் சாப்பிடவும்.
சத்தான சுவையான ஸ்பெஷல் டிஷ் இது.