குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது இந்த dal செய்வதும் வெகு சுலபம்.
செய்முறை:
வீட்டிலிருக்கும் நபர்களுக்கு ஏற்றவாறு துவரம் பருப்பு மற்றும் பயத்தம் பருப்பை சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். இதில் பயத்தம் பருப்பின் பங்கு குறைவாக இருக்க வேண்டும். ஏனென்றால் பயத்தம் பருப்பை அதிகமாக சேர்த்தால் dal கட்டியாகி விடும். துவரம் பருப்பை ஒரு கப் அளவிற்கு எடுத்து கொண்டால் 1/4 கப் பயத்தம் பருப்பு போதுமானது.
குக்கரில் பருப்பை நன்றாக கழுவி அத்துடன் ஒரு தக்காளி பழத்தையும், ஒரு வெங்காயத்தையும் நறுக்கி போடவும். 2 அல்லது 3 பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கி போடவும். உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்ககவும். தேவையான தண்ணீரை ஊற்றி 5 or 6 whistle வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். ஆறிய பிறகு பருப்பை நன்றாக கடைய வேண்டும். பருப்போடு சேர்ந்து இருக்கும் தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயையும் சேர்த்து மசிக்க வேண்டும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து மசிந்து இருக்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு சீரகத்தை தாளித்து கொள்ள வேண்டும். இரண்டு சிவப்பு மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி மற்றும் நான்கைந்து பல் பூண்டையும் நசுக்கி போட்டு வதக்கவும். பிறகு கடைந்த பருப்பை ஊற்றி கொதிக்க விடவும். இன்னும் கொஞ்சம் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு மேலே கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கிப் போடவும். இந்த dal சிறிது தண்ணீராக தான் இருக்க வேண்டும். கட்டியாக இருந்தால் சாப்பிட ருசியாக இருக்காது.
வெங்காயத்திற்கு பதிலாக spring onion இருந்தால் அதை போடுங்கள். ஏதாவது ஒன்றைத் தான் போட வேண்டும், வெங்காயம் அல்லது spring onion. வெங்காயம் மற்றும் தக்காளியைத் தவிர முள்ளங்கி இருந்தால் ஒரு முள்ளங்கியையும் நறுக்கிச் சேரத்து போட்டால் இன்னும் சுவையாக இருக்கும். பூண்டு பிடிக்காதவர்கள் பூண்டைத் தவிர்க்கலாம்.
அடுத்தபடியாக பாகற்காய் சிப்ஸ் ரெசிபியை பார்க்கலாம்:
இரண்டு பேருக்கு 250g பாகற்காய் போதுமானது. நபர்களுக்கு ஏற்றவாறு அளவை ஏற்றிக் கொள்ளவும்... முதலில் 250g பாகற்காயை தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அதை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும். உள்ளே இருக்கும் விதை முற்றிப் போயிருந்தால் நீக்கி விடவும்.
நறுக்கிய பாகற்காயோடு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், 1 spoon மிளகாய்த் தூள், 3 spoon கடலை மாவைச் சேர்த்து (250g பாகற்காய்க்கு 3 spoon கடலை மாவு சேரக்க வேண்டும்) நன்றாக பிசிறி 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெயை வைத்து காய்ந்த பிறகு பிசிறிய பாகற்காயை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறத்தில் வறுத்தெடுக்கவும்.
மதிய வேளையில் சாதத்தோடு இந்த dalல் பிசைந்து பாகற்காய் சிப்ஸை தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதனோடு salad ஐயும் சேர்த்து சாப்பிடலாம்.