

பப்பாளி காய் பொரியல்
தேவை:
பப்பாளிக்காய் - 250 கிராம், எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு-1 டீஸ்பூன்,
சீரகம்-1டீஸ்பூன், பெருங்காயத்தூள்-1/4 டீஸ்பூன்,
மஞ்சள்-1 டீஸ்பூன், பச்சைமிளகாய்-2,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பப்பாளிக்காயை நீள வாக்கில் சீவி, கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, பச்சைமிளகாய் மஞ்சள் சேர்த்து வதக்கி, பப்பாளி சீவல், உப்பு சேர்த்து வதக்குங்கள். தண்ணீர் சேர்க்கக்கூடாது. பப்பாளி வேகும் வரை தட்டுபோட்டு மூடி, வெந்ததும் இறக்கிவிடவும். சுவையான பப்பாளிக் காய் பொரியல் ரெடி.
பப்பாளி காய் சூப்
தேவை:
பப்பாளிக் காய் – ஒன்று, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பப்பாளியை தோல் சீவி, உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு கேரட் துருவியில் துருவவும். கடாயில் எண்ணெய் விட்டு, துருவிய பப்பாளிக் காயை சேர்த்து நன்கு வதக்கவும். ஆறிய பின் நைஸாக அரைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி சூடாக பரிமாறலாம். சூப்பர் சுவையில் பப்பாளிக் காய் சூப் தயார்.
பப்பாளி காய் பச்சடி
தேவை:
பப்பாளி காய் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி - 2 கைப்பிடி அளவு
தயிர் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பப்பாளிக் காயை நன்றாகக் கழுவி, தோல் சீவி, விதை நீக்கி துருவி கொள்ளவும். ஒரு கடாயில் கொஞ்சம் நீர் விட்டு, மிளகாய் தூள் சேர்த்து வேகவைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி இரண்டையும் கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தயிரை கடைந்து அதனுடன் வேகவைத்த பப்பாளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மிளகு தூள், சீரக தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான பப்பாளிக்காய் பச்சடி ரெடி.