இன்றைக்கு சுவையான பாய் வீட்டு நெய் சோறு மற்றும் சிதம்பரம் ஸ்பெஷல் கத்திரிக்காய் கொத்சு ரெசிபிஸ் எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்னு பார்ப்போம்.
நெய் சோறு செய்ய தேவையான பொருட்கள்.
நெய்-4 தேக்கரண்டி.
பட்டை-1
கிராம்பு-1
ஏலக்காய்-3
பிரியாணி இலை-1
வெங்காயம்-1
தக்காளி-1
தேங்காய் பால்-1 ½ கப்.
பாஸ்மதி அரிசி-1 கப்.
பூண்டு-4
பச்சை மிளகாய்-2
உப்பு- தேவையான அளவு.
புதினா-சிறிதளவு.
நெய் சோறு செய்முறை விளக்கம்.
முதலில் குக்கரில் 4 தேக்கரண்டி நெய் விட்டு அதில் ஏலக்காய் 3, பட்டை 1, பிரியாணி இலை 1, கிராம்பு 1 சேர்த்துவிட்டு இத்துடன் நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது 2 பச்சை மிளகாய், பூண்டு 4 சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி 1, புதினா சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது 1 கப் பாஸ்மதி அரிசிக்கு 1 1/2கப் அளவு தேங்காய் பால் சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் உப்பு தேவையான அளவு சேர்த்து ஊற வைத்த 1 கப் பாஸ்மதி அரிசியை சேர்த்து கலந்துவிட்டு குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பாய் வீட்டு நெய் சோறு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
கத்தரிக்காய் கொத்சு செய்ய தேவையான பொருட்கள்.
பொடி செய்வதற்கு,
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
மல்லி-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-5
வெந்தயம்-1 தேக்கரண்டி.
கொத்சு செய்வதற்கு,
நல்லெண்ணெய்-2 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை- சிறிதளவு.
கத்தரிக்காய்-2
உப்பு- தேவையான அளவு.
புளி கரைச்சல்- 1கப்
கத்தரிக்காய் கொத்சு செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றிக்கொண்டு கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, மல்லி 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 5 சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடி பண்ணி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அதில் 1 தேக்கரண்டி கடுகு, உளுந்து 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிது சேர்த்து பொரித்து அத்துடன் நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய் 2, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும். புளி கரைச்சல் 1கப் சேர்த்து நன்றாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும். இதிலேயே கடைசியாக அரைத்து வைத்திருக்கும் கோஸ்த்து பொடியை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். அவ்வளவு தான். சுவையான சிதம்பரம் ஸ்பெஷல் கத்தரிக்காய் கொத்சு தயார். இதை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.