
இன்றைக்கு சுவையான தித்திக்கும் பாம்பே அல்வா மற்றும் வேர்க்கடலை லட்டு ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
பாம்பே அல்வா செய்ய தேவையான பொருட்கள்;
சோளமாவு-1 கப்.
நெய்-தேவையான அளவு.
முந்திரி-10
பாதாம்-10
வெள்ளேரி விதை-சிறிதளவு.
சர்க்கரை-1 கப்.
ஏலக்காய்-1/2 தேக்கரண்டி.
புட் கலர்-சிறிதளவு.
பாம்பே அல்வா செய்முறை;
முதலில் ஒரு பவுலில் சோளமாவு 1 கப்பை தண்ணீர் இன்றி நன்றாக கரைத்துக்கொள்ளவும். இப்போது ஃபேனில் நெய் 2 தேக்கரண்டி விட்டு நறுக்கிய முந்திரி 10, நறுக்கிய பாதாம் 10, வெள்ளரி விதைகள் சிறிதளவு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயில் சர்க்கரை 1 கப் சேர்த்து தண்ணீர் விட்டு சர்க்கரையை நன்றாக கரைத்துக்கொள்ளவும். இதில் ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும். இப்போது இதில் கரைத்து வைத்த சோளமாவு கலவையை சேர்த்துக்கொள்ளவும். இப்போது புட் கலரை தண்ணீரில் விட்டு கரைத்து சோளமாவில் சேர்த்துக் கொள்ளவும்.
முதலில் 2 தேக்கரண்டி நெய் விட்டுக் கிண்டுங்கள். பிறகு மறுபடியும் 2 தேக்கரண்டி நெய்விட்டுக் கிண்டுங்கள். வறுத்து வைத்த நட்ஸை இத்துடன் சேர்த்து கிண்டவும். இப்போது 2 தேக்கரண்டி நெய்விட்டு ஒரு தட்டில் நெய்தடவி அதில் செய்து வைத்திருக்கும் அல்வாவை சேர்த்து சமமாக பரப்பி விடுங்கள். பிறகு சின்ன சின்ன துண்டுகளாக அல்வாவை வெட்டி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பாம்பே அல்வா தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
வேர்க்கடலை லட்டு செய்ய தேவையான பொருட்கள்
வேர்க்கடலை-1 கப்.
சர்க்கரை-1 கப்.
ஏலக்காய் தூள்-1 தேக்கரண்டி.
வேர்க்கடலை லட்டு செய்முறை;
முதலில் கடாயில் 1 கப் வேர்க்கடலையை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது வேர்க்கடலை தோலை நீக்கிவிட்டு வேர்க்கடலையை மட்டும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இத்துடன் வெல்லம் 1கப், ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது இதை ஒரு பவுலில் மாற்றி சின்ன சின்ன லட்டுகளாக பிடித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வேர்க்கடலை லட்டு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.