இவைகள் இருந்தால் போதும் ருசியான சாட் ஐட்டம் நொடியில் ரெடி!

health chat item recipes
chat items...Image credit - pixabay
Published on

ற்போது வெகு பிரபலமாக இருக்கும் உணவு வகைகளில் ஒன்று விதவிதமான சாட் ஐட்டங்கள்.  வட இந்தியாவில் மிகப் பிரபலமான இவை தற்போது நம்மிடத்திலும் மிகவும் விரும்பத்தக்கதாக மாறிவிட்டது. இதற்கு அடிப்படை என்னவென்று பார்த்தால் அதில் சேர்க்கப்படும் இனிப்பு சட்னி , புளிப்பு சட்னி, பச்சை சட்னி மற்றும் சாட் மசாலா, கரம் மசாலா போன்றவைகள்தான். என்னதான் கடைகளில் காசு கொடுத்து வாங்கினாலும் வீடுகளில் ஆரோக்கியமாக தயாரித்தால் உடல் நலம் கெடாது. சாட் தயாரிக்க இந்த அடிப்படைகளை தெரிந்து வைத்துக் கொண்டால் வீட்டிலேயே எளிதாக செய்யலாம் சாட் வகைகளை.

இங்கு தேவைப்படும் பொருள்கள் மற்றும் செய்முறை மட்டும் தருகிறேன். அளவுகள் அவரவர் ருசிக்குத் ஏற்றாற்போல் எடுத்துக் கொள்ளவும்.

இனிப்பு சட்னி
தேவை:

வெல்லம், சீரகம், மிளகாய் தூள், உலர் மாங்காய் தூள், கருப்பு உப்பு,சுக்குத்தூள், விதை நீக்கிய பேரிச்சை

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தைப்போட்டு தேவையான தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பேரிச்சை, ஆம்சூர் பவுடர் மற்றும் பிற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை கிளறி விட்டுக் கொண்டே கொதித்த உடன் சட்னி சற்றே நீர்க்க வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.

புளிப்பு சட்னி
தேவை:

புளி கரைசல் , வெல்லம், மிளகாய்த்தூள் சுக்குத்தூள், கருப்பு உப்பு

செய்முறை:
பொடித்த வெல்லத்தை தேவையான தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து லேசாக கொதிக்க விட்டு தூசியை வடிகட்டவும். பின்னர் மற்ற அனைத்தையும் இதனுடன் ஒன்றாக கலந்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதித்து சற்று கெட்டிப்பதம் வந்ததும் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி நன்றாக ஆறியதும் எடுத்து வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
மராட்டிய மாநில ஸ்பெஷல் சீம்பால் கார்வாஸ்!
health chat item recipes

பச்சை சட்னி
தேவை:

கொத்தமல்லித்தழை, புதினாத்தழை  பச்சை மிளகாய் எலுமிச்சை சாறு வெல்லம், உப்பு

செய்முறை:
கொத்தமல்லித்ழையையும் புதினாத் தழையையும் நன்றாக அலசி  நறுக்கிக்கொள்ளவும். மீதமுள்ள அனைத்தையும் மிக்ஸியில் தழைகளுடன் ஒன்றாக போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். சாட் வகைகளுக்கு இந்த பச்சை சட்னியை கெட்டியாக உபயோகிக்கலாம். ஆனால் பானிபூரி என்றால் மட்டும் இந்த சட்னியுடன் தேவையான நீர் சேர்த்து கரைத்து நீர்க்க பயன்படுத்தலாம்.

சாட் மசாலா
தேவை:

தனியா, வரமிளகாய், சீரகம், ஆம்சூர் பவுடர், மிளகு, கருப்பு  உப்பு

செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் மிதமான கனவில் உப்பை தவிர மற்ற பொருட்களை போட்டு  வறுத்து ஆறவைக்கவும் . பின்னர் அதை மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து நைசாக அரைத்து ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு தேவைப்படும்போது ஸ்பூனில் எடுத்து பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com