சுவையான சீஸ் மக்ரோனி வீட்டிலேயே செய்யலாம்! 

Delicious cheese macaroni can be made at home.
Delicious cheese macaroni can be made at home.

க்ரோனி பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட உணவாகும். இது இத்தாலியில் தோன்றியதாக சொல்லப்படுகிறது. அங்கு பாஸ்தா மற்றும் சீஸ் ஆகியவை ஒன்றாக சேர்த்து செய்யப்படும் 'மக்ரோனி அல்பாமாஜியோ' என்ற உணவு பிரபலமானது. இவைதான் காலப்போக்கில் பல நாடுகளுக்குள் ஊடுருவி மக்ரோனி என்று அனைவராலும் கூறப்பட்டது. பதப்படுத்தப்பட்ட உணவுகளின் ஆதிக்கத்தால் 20ம் நூற்றாண்டில் இது குறிப்பிடத்தக்க பிரபலமடைந்துள்ளது. 

இன்றைய கால இளைஞர்கள் துரித உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு மக்ரோனி, நூடுல்ஸ் போன்றவை விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது. பெரும்பாலான சமயங்களில் அவற்றை நாம் உணவகங்களிலேயே வாங்கித் தருகிறோம். ஆனால் அவர்களுக்கு பிடித்தவாறு வித்தியாசமான சுவையில் வீட்டிலேயே நாம் சீஸ் மக்ரோனி செய்து தரலாம். இந்த பதிவில் சீஸ் மக்ரோனி எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

  • மக்ரோனி - 1 கப்

  • உப்பு - தேவையான அளவு

  • துருவிய சீஸ் - ½ கப்

  • சர்க்கரை - 1 டீஸ்பூன் 

  • வெண்ணெய் - 1 டீஸ்பூன் 

  • காய்ச்சிய பால் - ½ கப்

  • தண்ணீர் - 3 கப்

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அதில் சிறிய அளவு உப்பு, மக்ரோனி சேர்த்து குறைந்த தீயில் மக்ரோனியை வேக விடவும். மக்ரோனி நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து அதிலுள்ள நீரை வடிகட்டி விடவும். 

பின்னர் அந்த மக்ரோனியில் பால், சீஸ், வெண்ணை சேர்த்து நன்றாகக் கிளறி அதன் பிறகு சிறிதளவு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டால் சுவையான சீஸ் மக்ரோனி தயார். இதற்காக ஓர் குறிப்பிட்ட தொகையை நீங்கள் உணவகத்திற்கு வழங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com