காபி பிரியர்களுக்கான சுவையான டெசர்ட்ஸ்!

காபி ப்ரௌனி
காபி ப்ரௌனிwww.thekitchn.com

காபி  அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. காபி பவுடரை ஐஸ் கிரீம், புட்டிங்ஸ், கேக்ஸ் ஆகியவற்றில் கலந்து சுவையான காபி டெசர்ட்ஸ் செய்யலாம். அந்த வகையில் காபி பவுடர் வைத்து செய்யப்படும் இனிப்பான உணவு வகைகள் பற்றிப் பார்ப்போம்.

காபி ப்ரௌனி:

திக இனிப்பு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்கள் ப்ரௌனியில் காபி பவுடர் சேர்த்துக் கொள்ளலாம்.

கடாயை முன் கூட்டியே சுட வைத்து அரை வெப்ப நிலையில் இருக்கும்போது பால் மற்றும் வினிகர் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சோடா,  கோகோ தூள், காபி தூள், உப்பு மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

ஏற்கனவே ஒதுக்கி வைத்திருந்த பால் மற்றும் வினிகருடன் வெண்ணிலா சாறு மற்றும் எண்ணெய்யை கலக்கவும். அவற்றை மாவு கலவையில் கலக்கவும்.

பின்னர் நெய் தடவிய ஒரு கடாயில் மாவை மாற்றி  வால் நட்டுகளை சேர்க்கவும். 30 நிமிடங்கள் வரை சுட வைத்த பின்னர் சதுரங்கமாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

சாக்லேட் காபி சீஸ் கேக்:

முதலில் சாக்லெட் ஓரியோ பிஸ்கட் (நொறுக்கியது), வெண்ணெய், சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து வைத்துக்கொள்ளவும். நெய் தடவிய 8 அங்குலம் கொண்ட கடாயில்  அந்த பிஸ்கட் கலவையை எடுத்து தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும்.

சாக்லேட் காபி சீஸ் கேக்
சாக்லேட் காபி சீஸ் கேக்www.youtube.com

பின்னர் மற்றொரு கிண்ணத்தில் க்ரீமைக் கலக்கிக் கொண்டே சர்க்கரை சேர்க்க வேண்டும். பிறகு முட்டை சேர்த்து மெதுவாக கலக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சாக்லேட்டை நன்றாக தண்ணீரில் உருக்கி அதனுடன் க்ரீம், காபி, வெண்ணிலா கலந்து நன்றாக கலக்கவும். அதனுடன் க்ரீம் முட்டை  கலவை சேர்த்து 350 டிகிரி அளவில் 45 நிமிடங்கள் சுட வைக்க வேண்டும். சுட வைத்து எடுத்த பின்னர் ஓவனில் ஒரு 45 நிமிடங்கள் வைக்க வேண்டும். அதன்மேல் முதலில் நொறுக்கிய பிஸ்கட் கலவை சேர்த்து ஃப்ரிட்ஜில் 12 மணி நேரம் வைத்த பிறகு எடுத்து சாப்பிட்டால் சுவையான சீஸ் கேக் ரெடி.

கேரமல் காபி கேண்டி:

முதலில் பாலில் காபியை சேர்த்து தனியாக  வைத்துக் கொள்ளவும்.

அதேபோல் கடாயில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கேரமல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கேரமல் காபி கேண்டி
கேரமல் காபி கேண்டிsoutherncaramel.com

கேரமலில் பால் காபி கலவையை சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் அதனை எடுத்து பட்டர் பேப்பர் போட்ட கிண்ணத்தில் ஊற்றவும். லேசான சூடு இருக்கும்போது உங்களுக்கு பிடித்த வடிவத்தில் செய்து பேப்பரில் சுற்றி வைத்தால் சுவையான கேரமல் காபி மிட்டாய் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com