
தேவையான:
நல்ல பாஸ்மதி ரைஸ் 1 1/2 கப்
கடலைப் பருப்பு 1/2 கப்
சர்க்கரை 2 கப்
நெய் 1 கப்
லவங்கப் பட்டை 5 துண்டுகள்
கிராம்பு 10
முந்திரிப் பருப்பு 10
பாதாம் பருப்பு 10
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
உப்பு 1/4 சிட்டிகை
தண்ணீர் தேவையானது.
செய்முறை:
முதலில் அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைத்து களைந்து ஒரு துணியில் உலர்த்தவும்.
கடலைப் பருப்பை ஒருமணி நேரம் ஊறவைத்து, சுத்தம் செய்து வடித்து வேறு துணியில் உலர்த்தவும்.
முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு இவைகளை ஒன்றிரண்டாக ஒடித்து வைத்துக்கொள்ளவும்.
அடிக்கனமான வாணலி ஒன்றில் நெய்யை விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும், ஒடித்து வைத்த பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பிறகு கிராம்பைப் போட்டு வெடித்ததும், பட்டைத் துண்டுகளைப் போடவும். உலர்த்தி வைத்த பாஸ்மதி அரிசியை இத்துடன் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
உலர்த்திய கடலைப்பருப்பையும் இதில் போட்டு இரண்டு கிளறு கிளறி சுமார் 4 கப் கொதிக்கும் நீரை விட்டு, மேலே ஒரு பெரிய தட்டைப் போட்டு மூடிவிடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.
சுமார் 10 நிமிடங்கள் சென்ற பின் மூடியைத் திறந்து லேசாக கிளறிவிட்டு மீண்டும் தட்டு வைத்து மூடிவிடவும். கொஞ்சநேரம் சென்றபிறகு பார்க்கையில் இரண்டும் வெந்திருக்கும். இத்துடன் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து மெதுவாக கிண்டிக்கொண்டே இருக்கையில், நெய் சற்றே மேலே வரும்.
அனைத்தும் சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு-பாதாம் பருப்பு மற்றும் ஏலப்பொடி ஆகியவைகளை பரவலாக தூவி சுடச்சுட சாப்பிடுகையில், கிராம்பு-லவங்கப்பட்டை வாசனை மணக்க, ஃப்ரென்ஞ்ச் ஸ்வீட் ரைஸ் ருசியாக, இனிப்பு சுவையுடன் சூப்பராக இருக்கும்.