விருந்தாளிகள் எப்பொழுதும் சர்ப்ரைஸ் ஆக வருவதுண்டு. அந்த நேரத்தில் எளிமையாக செய்து இனிமையாக பரிமாறலாம். அதற்கான இரண்டு ரெசிபிக்கள் இதோ:
பழ குணுக்கு:
செய்யத் தேவையான பொருட்கள்:
வடிமட்ட அரிசி -ஒரு கப்
பச்சரிசி மாவு- அரை கப்
கோதுமை மாவு -கால் கப்
துருவிய வெல்லம்- ஒரு கப்
தேங்காய்த் துருவல்- கால் கப்
பொடியாக அறிந்த பலாச்சுளைகள்- அரை கப்
நேந்திரம் பழம் பொடியாக அரிந்தது- கால் கப்
இரண்டு சிட்டிகை -ஏலப்பொடி
இரண்டு சிட்டிகை- உப்பு
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
வடிமட்ட அரிசியை நன்றாக ஊறவைத்து மைய மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லத்துருவலையும் சேர்த்து அரைத்து எடுக்கவும். பின்னர் மேலே கொடுத்துள்ள அனைத்தையும் இதனுடன் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பிசைந்த மாவை சிறுசிறு குணுக்குகளாக சீடை அளவில் கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும் . பலா நேந்திர பழ குணுக்குகள் ரெடி. கமகம வாசனையில் எளிமையான ஸ்வீட் இது.
தால் குணுக்கு:
செய்யத் தேவையான பொருட்கள்:
நரிப்பயறு -ஒரு கப்
கடலைப்பருப்பு -ஒரு கைப்பிடி
அரிசி- ஒரு கைப்பிடி
வர மிளகாய் -ஆறு
சோம்பு, சீரகம், மிளகு தலா -ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை -ஒரு கைப்பிடி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
நரிப்பயிறு, அரிசி ,கடலைப் பருப்பு மூன்றையும் நன்றாக ஊறவைத்து வர மிளகாய் ,சோம்பு, சீரகம், மிளகு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து பிசைந்து குட்டி குட்டி துணுக்குகளாக காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுக்டி:
செய்யத் தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- ஒரு கப்
நெய் -ஒரு கப்
வெல்லத் துருவல் -ஒரு கப்
செய்முறை:
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய்யை ஊற்றவும். நெய் சூடானதும் கோதுமை மாவை சேர்த்து வாசம் வரும் வரை நன்றாக வறுக்கவும். மாவு வெந்து நல்ல வாசம் வரும்போது வெல்லத் துருவலை அதில் சேர்த்துக் கிளறி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சிறிது ஆறவிட்டு துண்டுகள் போடவும். சுக்டி ரெடி. செய்வது மிக எளிது. நெய் சரியான அளவு ஊற்றினால்தான் நன்றாக வரும். கொஞ்சம் குறைந்தாலும் சரியாக வராது. கருகிவிடாமல் செய்து இறக்கவும்.