சுவையான பூண்டு குழம்பு செய்யலாம் வாங்க!

Delicious garlic gravy.
Delicious garlic gravy.
Published on

ம் சமையலறைகளில் எப்போதும் இருக்கும் பொருள்களில் ஒன்றுதான் பூண்டு. இதில் உள்ள நன்மைகளும் மருத்துவ குணங்களும் ஏராளம். இதில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தும் காணப்படுகிறது. ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துவதற்கும், ஜலதோஷத்தைத் தடுக்கவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் பூண்டு உதவுகிறது. 

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டை பயன்படுத்தி எப்படி குழம்பு செய்யலாம் எனப் பார்க்கலாம். இந்த பூண்டு குழம்பை 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். 

தேவையான பொருட்கள்:

  • பூண்டு - 1 கப்

  • காய்ந்த மிளகாய் -2

  • சின்ன வெங்காயம் - ½ கப்

  • புளி - சிறிதளவு

  • கருவேப்பிலை - சிறிதளவு 

  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • தக்காளி - 2

  • கடுகு - சிறிதளவு

  • உளுத்தம் பருப்பு - சிறிதளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் எலுமிச்சங்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். புளியை தண்ணீரில் உதிர்த்து போட்டு ஊற வைக்கும்போது அது வேகமாக கரையும். 

அதன் பின்னர் சூடான கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சிறிதளவு பெருங்காயம் போட்டு நன்கு வதக்கவும். அது நன்கு பொரிந்ததும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சில வினாடிகள் வதக்கவும். 

பின்னர் தோல் நீக்கிய பூண்டுகளை அதில் சேர்த்து அது பொன்னிறமாக மாறும் வரை வதக்கியதும், அதில் வெங்காயம் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அது பின்னர் தக்காளி சேர்த்து, மென்மையாக மாறும் வரை வேக விடவும். 

தக்காளி வெந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித்தூள் போன்ற மசாலாக்களை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது மசாலா தீயாமல் இருக்க கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

புளியை நன்றாகக் கரைத்து கெட்டியான சாறு பிழிந்து கொள்ளவும். பின்னர் அந்த சாரை வாணலியில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு கெட்டியான பதம் வந்துவிட்டால் சுவையான கமகமக்கும் பூண்டு குழம்பு தயார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com