நாவை சுண்டி இழுக்கும் சுவையான சூடான பருப்பு வடை!

பருப்பு வடை
பருப்பு வடைcookpad.com

ன்று முதல் இன்று வரை வடை என்றால் பருப்பு வடையும் மெதுவடையும்தான் ஃபேமஸ். அதிலும்  டீக்கடை முதல் உணவகங்கள் வரை எப்போதும் இருக்கும் ஸ்நாக்ஸ் வகைகளில்  முதலிடம் பிடிப்பது மசால் வடை எனப்படும் பருப்பு வடையே. திருமணங்களில் மதிய வேளையில் அறுசுவை உணவில் நிச்சயம் இடம் பிடிப்பது இந்த பருப்பு வடையே. வாங்க பண்டிகை கால ரெசிபியான பருப்பு வடை செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்;
கடலை பருப்பு - 1 கப்
பட்டாணிப்பருப்பு - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் & பச்சை மிளகாய் - தலா 3
பட்டை லவங்கம் - தலா 4
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
வாவ்.. சூப்பரா இருக்கே இந்த மேகி பேல் பூரி! 
பருப்பு வடை

செய்முறை:
டலை பருப்பு மற்றும் பட்டாணிப் பருப்பை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும். (அதிக நீர் இருந்தால் மாவில் நீர் விடும்)  அதில்  ஒரு கைப்பிடி பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மீதமுள்ள பருப்புடன் வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து (தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து) ஒன்றிரண்டாக அரைத்து கடைசியாக தேவையான உப்பு மற்றும் பட்டை லவங்கம் சோம்பு சேர்த்து  இரண்டு சுற்று சுற்றி மாவை நைசாக இல்லாமல் மொறமொறப்பாக ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுக்கவும்.

அதில் எடுத்து வைத்த ஊறிய பருப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் வடை மூழ்குமளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பருப்புக் கலவையை ஒரே சைஸில் சிறிய உருண்டைகளாக பிடித்து ஒரே தட்டு தட்டிப் போட்டு இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்.

இதை தயிரில் ஊறவைத்து மேலே கொத்தமல்லி தழை, பூந்தி சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com