தேவை;
வாழைக்காய் - 2
பொட்டுக்கடலை - 5 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பட்டை - சிறு துண்டு
சோம்பு - கால் டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை, மல்லிதழை - சிறிது
எண்ணெய் - பொரிக்க
செய்முறை;
வாழைக்காயை, காம்பு, நுனி வெட்டிவிட்டு ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு வேக விடவும். ஆறியபின் தோல் உரித்து வாழைக்காயை துருவவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடிக்கவும்.
அதில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பட்டை, சோம்பு, உப்பு, சேர்த்து கொர கொரப்பாக பொடித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு துருவிய வாழைக்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை அனைத்தும் சேர்த்துப் பிசையவும். இதை உருண்டைகளாக உருட்டி வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இதை சாஸ், சட்னியுடன் சாப்பிட ருசியோ ருசியாக இருக்கும்.
ஸ்டஃப்டு ட்ரை ஃப்ரூட் பால்ஸ்
அரிசி ரவை - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - தேவைக்கு
பாதாம், முந்திரி, உலர்திராட்சை, பேரீச்சம்பழ துண்டுகள் - 1 கப்
தூள் வெல்லம் - கால் கப்
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை;
அடுப்பில் வாணலியை வைத்து நீர்விட்டு கொதித்த பின் அரிசிரவை, தேங்காய் துருவல், சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கிறைவும்.
ட்ரை ப்ரூட்ஸ், வெல்லம் கலந்து பிசையவும். கையில் நெய் தடவிக் கொண்டு கிளறிய மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, நடுவில் கட்டை விரலால் அழுத்தி குழி செய்து நடுவில் ட்ரை ஃப்ரூட்ஸ் கலவையை வைத்து மூடி உருட்டவும்.
இதுபோல் எல்லாவற்றையும் உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சத்தான சுவையான ஸ்டஃப்டு ட்ரை ஃப்ரூட் பால்ஸ் தயார். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர். செய்து பாருங்கள்.