ருசியான கொப்பரைத் தேங்காய் அதிரசமும், சாமை பொங்கலும்!

Tasty Pongal - Adhirasam recipes
healthy foodsImage credit - youtube.com
Published on

ரம்பத்தில் அதிரசம் செய்ய கற்றுக் கொள்ளும்போது பாகுபதம் தவறி சரியாக வராது. அதையே அடிக்கடி ஒரு டம்ளர் அரிசிக்கு ஒரு டம்ளர் வெல்லம் என்று சரியான அளவு போட்டு அடிக்கடி செய்து பார்த்தோமானால், நன்றாக பழகிவிடும். பிறகு மற்ற பலகாரத்தை விடவும் அதிரசம் செய்வதுதான் எளிது என்று ஆகிவிடும். நன்றாக பழகிய பிறகு தேங்காய் சேர்த்து செய்வது, நட்ஸ் ஃப்ளேக்ஸ் சேர்த்து செய்வது, பேரிச்சை சேர்த்து செய்வது என்று வகை வகையாக செய்து அசத்தலாம். நன்றாக பழகி விட்டதால் எப்படி குளறுபடியானாலும் சரி செய்து அதிரசத்தை அழகாக செய்து முடித்து விடலாம். 

 கொப்பரைத் தேங்காய் அதிரசம்

 செய்ய தேவையான பொருட்கள்:

அதிரசத்துக்கு ஏற்ற ஈர பச்சரிசி மாவு- ஒரு கப்

பாகு வெல்லம் துருவியது -ஒன்னரை கப்

துருவிய கொப்பரைத்தேங்காய்- கால் கப்

ஏலத்தூள்- சிறிதளவு

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

ஈர பச்சரிசி மாவுடன் கொப்பரை, ஏலத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். வெல்லத்தில் ஒரு கப் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றி ஒரு கொதி வரவிட்டு இறக்கவும். பாகில் அரிசி மாவு கலவையை சேர்த்து கைவிடாது கிளறி இறக்கி ஆறவிட்டு மண் பாத்திரத்தில் செய்திருந்தால் ஒரு வெள்ளை துணியால் வேடு கட்டி மூடி வைக்கவும். மறுநாள் மாவில் சிறிது எடுத்து இலையில் அதிரசமாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும் .அதிரசத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை இரண்டு கிண்ணங்களுக்கு இடையில் வைத்து அழுத்தினால் வடிந்துவிடும் .சுவையில் அசத்தும் இந்த கொப்பரைத்தேங்காய் வெல்ல அதிரசம். தேங்காய் பிடிக்காதவர்கள் தேங்காயை தவிர்த்தும் செய்யலாம்.

சுவையான சாமை பொங்கல்:

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி -ஒரு கப் 

பயத்தம் பருப்பு -அரை கப்

நெய்-கால் கப்,

முந்திரி பருப்பு- 10 

இரண்டாக உடைத்த மிளகு- ரெண்டு டீஸ்பூன்

சீரகம்- ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, தனியா- தாளிக்க

வேர்க்கடலை -ஒரு டேபிள் ஸ்பூன்

தண்ணீர்- 4கப்

பால்- 1கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி- ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை:

சாமை அரிசியோடு பயத்தம்பருப்பை அலசி லேசாக வறுத்து நீர் பால் விட்டு உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். வெந்ததும் கடாயில் நெய் விட்டு இஞ்சி, உடைத்த மிளகு, சீரகம், வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலை, தனியா போட்டு தாளித்து வேகவிட்டு  பொங்கலில் ஊற்றிக் கிளறவும். கமகம வாசனையில் சாமை பொங்கல் ரெடி. இதனுடன் முள்ளங்கி சட்னி, பீர்க்கங்காய் சட்னி என்று எதை வைத்து சாப்பிட்டாலும் ருசி அள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com