ருசியான பொட்டுக்கடலை வடையும், தால் தேன்குழலும்!

Delicious peanut vadai and dal thenkuzhal!
Healthy SnacksImage credit - youtube.com
Published on

பொட்டுக்கடலை வடை:

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடித்த பொட்டுக்கடலை பொடி -ஒரு கப்

கடலை மாவு1/2கப்

ரவை- ரெண்டு டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -ஒரு கப்

அரைக்க:

சோம்பு, மல்லி விதை தலா- ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல்- அரை கப்

முந்திரி பருப்பு -10

கசகசா -ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் -4

வர மிளகாய் -இரண்டு

கொத்தமல்லி, கருவேப்பிலை பொடியாக நறுக்கியது- ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் ,உப்பு தேவையான அளவு

செய்முறை:

அரைக்க கொடுத்தவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த விழுதுடன் மேலே கூறிய மாவுகள், உப்பு மற்றும் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து  வடை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மிகவும் வித்தியாசமான   வாசனை, ருசியுடன் சுவைக்க தகுந்த வடை இது. தேங்காய் சட்னி நல்ல ஜோடி சேரும்.

தால் தேன்குழல்:

செய்யத் தேவையான பொருட்கள்:

பச்சரிசி -ஒரு கிலோ

புழுங்கல் அரிசி- ஒரு டம்ளர்

பொட்டுக்கடலை ,உளுந்து, கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, ஜவ்வரிசி எல்லாமாக சேர்த்து- ஒரு டம்ளர் 

எள், ஓமம் -ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் கரைத்த நீர் ஒரு டேபிள் ஸ்பூன்

 உப்பு, எண்ணெய் தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
தோசைமாவு இல்லாமலே தோசை…! அதற்கு தோதாக பச்ச புளி சட்னியுமா?
Delicious peanut vadai and dal thenkuzhal!

செய்முறை:

பச்சரிசியை கழுவி காயவைத்து  அதனுடன் புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகள் அனைத்தையும் வறுத்து போட்டு மிஷினில் கொடுத்து அரைத்து  கொள்ளவும். பிறகு அந்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து பொரித்த எள்ளு, ஓமம் மற்றும் சூடான எண்ணெய் இரண்டு குழி கரண்டி விட்டு பெருங்காயத் தண்ணீரையும் ஊற்றி தண்ணீர் சேர்க்காமல் எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

பிறகு அந்த மாவில் சிறு சிறு அளவாக எடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி பிசைந்து முறுக்கு உரலில் தேன்குழல் அச்சு போட்டு பிழிந்து நன்றாக வேகவிட்டு எடுத்து வைக்கவும். டால் தேன்குழல் மணக்க மணக்க ரெடி. சாப்பிடுவதற்கு அசத்தலாக இருக்கும். வாயில் போட்டால் கரையும். நிறைய தால் வகைகள் சேர்ந்து இருப்பதால் அவ்வப்பொழுது தண்ணீர் ஊற்றி பிசைந்தால்தான் முறுக்கு அதிகம் சிவக்காமல் எடுக்க முடியும். தீபாவளிக்கு செய்து அசத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com